நெகேமியா 12

fullscreen1 செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்த ஆசாரியரும் லேவியரும் யாரென்றால்: செராயா எரேமியா, எஸ்றா,

fullscreen2 அமரியா, மல்லூக், அத்தூஸ்,

fullscreen3 செகனியா, ரெகூம், மெரெமோத்,

fullscreen4 இத்தோ, கிநேதோ, அபியா,

fullscreen5 மியாமின், மாதியா, பில்கா,

fullscreen6 செமாயா, யோயாரிப், யெதாயா,

fullscreen7 சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியருக்கும் தங்கள் சகோதரருக்கும் தலைவராயிருந்தார்கள்.

fullscreen8 லேவியர் யாரென்றால்: யெசுவா பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவன் சகோதரரும் துதிசெய்தலை விசாரித்தார்கள்.

fullscreen9 பக்புக்கியா, உன்னி என்கிற அவர்கள் சகோதரர் அவர்களுக்கு எதிரே காவல்காத்திருந்தார்கள்.

fullscreen10 யெசுவா யொயாசீமைப் பெற்றான், யாயசீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொயதாவைப் பெற்றான்.

fullscreen11 யொயதா யோனத்தானைப் பெற்றான், யோனத்தான் யதுவாலைப் பெற்றான்.

fullscreen12 யொயகீமின் நாட்களிலே பிதா வம்சங்களின் தலைவரான ஆசாரியர்கள் யாரென்றால்: செராயாவின் சந்ததியில் மெராயா, எரேமியாவின் சந்ததியில் அனனியா,

fullscreen13 எஸ்றாவின் சந்ததியில் மெசுல்லாம், அமரியாவின் சந்ததியில் யோகனான்,

fullscreen14 மெலிகுவின் சந்ததியில் யோனத்தான், செபனியாவின் சந்ததியில் யோசேப்பு,

fullscreen15 ஆரீமின் சந்ததியில் அத்னா, மெராயோதின் சந்ததியில் எல்காய்,

fullscreen16 இத்தோவின் சந்ததியில் சகரியா, கிநெதோனின் சந்ததியில் மெசுல்லாம்,

fullscreen17 அபியாவின் சந்ததியில் சிக்ரி, மினியாமீன்மொவதியா, என்பவர்களின் சந்ததியில் பில்தாய்,

fullscreen18 பில்காவின் சந்ததியில் சம்முவா, செமாயாவின் சந்ததியில் யோனத்தான்.

fullscreen19 யோயாரிபின் சந்ததியில் மத்தனா, யெதாயாவின் சந்ததியில் நெதனெயேல் என்பவர்கள்.

fullscreen20 சல்லாயின் சந்ததியில் கல்லாய், ஆமோக்கின் சந்ததியில் ஏபேர்,

fullscreen21 இல்க்கியாவின் சந்ததியில் அசபியா, யெதாயாவின் சந்ததியில் நெதனெயேல் என்பவர்கள்.

fullscreen22 எலியாசிபின் நாட்களில் யொயதா, யோகனான், யதுவா என்கிற லேவியர் பிதா வம்சங்களின் தலைவராக எழுதப்பட்டார்கள்; பெர்சியனாகிய தரியுவின் ராஜ்யபாரமட்டும் இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டார்கள்;

fullscreen23 லேவி புத்திரராகிய பிதா வம்சங்களின் தலைவர் எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் நாட்கள்மட்டும் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதப்பட்டார்கள்.

fullscreen24 லேவியரின் தலைவராகிய அபியாவும், செரெபியாவும், கத்மியேலின் குமாரன் யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்கள் சகோதரரும், தேவனுடைய மனுஷனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும், தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக முறைமுறையாயிருந்தார்கள்.

fullscreen25 மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் என்பவர்கள் வாசல்களிலிருக்கிற பொக்கிஷ அறைகளைக் காவல்காக்கிறவர்களாயிருந்தார்கள்.

fullscreen26 யோத்சதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரன் யொயகீமின் நாட்களிலும், அதிபதியாகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள்.

fullscreen27 எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணுகையில், துதியினாலும், பாடலினாலும் கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள்.

fullscreen28 அப்படியே பாடகரின் புத்திரர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியரின் கிராமங்களிலும்,

fullscreen29 பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலுமிருந்துவந்து கூடினார்கள்; பாடகர் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் கட்டியிருந்தார்கள்.

fullscreen30 ஆசாரியரும் லேவியரும் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, ஜனத்தையும் பட்டணவாசல்களையும் அலங்கத்தையும் சுத்தம்பண்ணினார்கள்.

fullscreen31 அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.

fullscreen32 அவர்கள் பிறகாலே ஒசாயாவும், யூதாவின் பிரபுக்களில் பாதிப்பேரும்,

fullscreen33 அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,

fullscreen34 யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா என்பவர்களும்,

fullscreen35 பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியரின் புத்திரரில் ஆசாப்பின் குமாரன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்குக் குமாரனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் குமாரன் சகரியாவும்,

fullscreen36 தேவனுடைய மனுஷனாகிய தாவீதின் கீதவாத்தியங்களை வாசிக்கிற அவன் சகோதரரான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி என்பவர்களும் போனார்கள்; வேதபாரகனாகிய எஸ்றா இவர்களுக்கு முன்பாக நடந்தான்.

fullscreen37 அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான ஊருணிவாசலுக்கு வந்தபோது, அலங்கத்தைப்பார்க்கிலும் உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின்மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசல்மட்டும் போனார்கள்.

fullscreen38 துதிசெய்கிற இரண்டாம் கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாய் நடந்துபோனார்கள், அவர்கள் பிறகாலே நான் போனேன்; ஜனத்தில் பாதிப்பேர் அலங்கத்தின்மேல் சூளைகளின் கொம்மையைக்கடந்து, அகழ் மதில்மட்டும் நெடுகப்போய்,

fullscreen39 எப்பிராயீம் வாசலையும் பழையவாசலையும், மீன் வாசலையும், அனானெயேலின் கொம்மையையும், மேயா என்கிற கொம்மையையும் கடந்து, ஆட்டுவாசல்மட்டும் புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள்.

fullscreen40 அதற்குப்பின்பு துதி செய்கிற இரண்டு கூட்டத்தாரும் தேவனுடைய ஆலயத்திலே வந்து நின்றார்கள்; நானும் என்னோடேகூட இருக்கிற தலைவரில் பாதிப்பேரும்,

fullscreen41 பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா என்கிற ஆசாரியர்களும்,

fullscreen42 மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகரும் அவர்கள் விசாரிப்புக்காரனாகிய யெஷாகியாவும சத்தமாய்ப் பாடினார்கள்.

fullscreen43 அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.

fullscreen44 அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதல் கனிகளையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்படியே வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்க்கும்படிக்கு, சில மனுஷர் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்மேலும் லேவியர்மேலும் யூதா மனிதர் சந்தோஷமாயிருந்தார்கள்.

fullscreen45 பாடகரும், வாசல் காவலாளரும், தாவீதும் அவன் குமாரனாகிய சாலொமோனும் கற்பித்தபடியே தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்.

fullscreen46 தாவீதும் ஆசாப்பும் இருந்த பூர்வநாட்களில் பாடகரின் தலைவரும் வைக்கப்பட்டு, தேவனுக்குத் துதியும் தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் திட்டம்பண்ணப்பட்டிருந்தது.

fullscreen47 ஆகையால் செரூபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும் இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியருக்கென்று பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்; லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்கைப் பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன்னுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது. உன்னை பலவீனப்படுத்த, உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ என்னிடம் சொல்லவேண்டும் என்றாள்.

Tamil Easy Reading Version
எனவே தெலீலாள் சிம்சோனிடம், “நீங்கள் எதனால் பெலசாலியாக இருக்கிறீர்கள் என்பதைக் கூறுங்கள். எவ்வாறு உங்களைக் கட்டி பெலவீனப்படுத்த முடியும்?” என்று கேட்டாள்.

Thiru Viviliam
தெலீலா சிம்சோனிடம், “எதில் உமது பெரும் வலிமை உள்ளது என்றும், எப்படி உம்மைக் கட்டி அடக்கமுடியும் என்றும் என்னிடம் சொல்லும்” என்றாள்.

Judges 16:5Judges 16Judges 16:7

King James Version (KJV)
And Delilah said to Samson, Tell me, I pray thee, wherein thy great strength lieth, and wherewith thou mightest be bound to afflict thee.

American Standard Version (ASV)
And Delilah said to Samson, Tell me, I pray thee, wherein thy great strength lieth, and wherewith thou mightest be bound to afflict thee.

Bible in Basic English (BBE)
So Delilah said to Samson, Make clear to me now what is the secret of your great strength, and how you may be put in bands and made feeble.

Darby English Bible (DBY)
And Deli’lah said to Samson, “Please tell me wherein your great strength lies, and how you might be bound, that one could subdue you.”

Webster’s Bible (WBT)
And Delilah said to Samson, Tell me, I pray thee, in what thy great strength lieth, and with what thou mayest be bound to afflict thee.

World English Bible (WEB)
Delilah said to Samson, Tell me, Please, in which your great strength lies, and with which you might be bound to afflict you.

Young’s Literal Translation (YLT)
And Delilah saith unto Samson, `Declare, I pray thee, to me, wherein thy great power `is’, and wherewith thou art bound, to afflict thee.’

நியாயாதிபதிகள் Judges 16:6
அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது, உன்னைச் சிறுமைப்படுத்த உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.
And Delilah said to Samson, Tell me, I pray thee, wherein thy great strength lieth, and wherewith thou mightest be bound to afflict thee.

And
Delilah
וַתֹּ֤אמֶרwattōʾmerva-TOH-mer
said
דְּלִילָה֙dĕlîlāhdeh-lee-LA
to
אֶלʾelel
Samson,
שִׁמְשׁ֔וֹןšimšônsheem-SHONE
Tell
הַגִּֽידָהhaggîdâha-ɡEE-da
thee,
pray
I
me,
נָּ֣אnāʾna
wherein
לִ֔יlee
great
thy
בַּמֶּ֖הbammeba-MEH
strength
כֹּֽחֲךָ֣kōḥăkākoh-huh-HA
lieth,
and
wherewith
גָד֑וֹלgādôlɡa-DOLE
bound
be
mightest
thou
וּבַמֶּ֥הûbammeoo-va-MEH
to
afflict
תֵֽאָסֵ֖רtēʾāsērtay-ah-SARE
thee.
לְעַנּוֹתֶֽךָ׃lĕʿannôtekāleh-ah-noh-TEH-ha