எண்ணாகமம் 13

fullscreen1 கர்த்தர் மோசேயை நோக்கி:

fullscreen2 நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார்.

fullscreen3 மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்தலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.

fullscreen4 அவர்களுடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் குமாரன் சம்முவா.

fullscreen5 சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் குமாரன் சாப்பாத்.

fullscreen6 யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் குமாரன் காலேப்.

fullscreen7 இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் குமாரன் ஈகால்.

fullscreen8 எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் குமாரன் ஓசேயா.

fullscreen9 பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் குமாரன் பல்த்தி.

fullscreen10 செபுலோன் கோத்திரத்தில் சோதியின் குமாரன் காதியேல்.

fullscreen11 யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் குமாரன் காதி.

fullscreen12 தாண் கோத்திரத்தில் கெமல்லியின் குமாரன் அம்மியேல்.

fullscreen13 ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் குமாரன் சேத்தூர்.

fullscreen14 நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் குமாரன் நாகபி.

fullscreen15 காத் கோத்திரத்தில் மாகியின் குமாரன் கூவேல்.

fullscreen16 தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே; நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.

fullscreen17 அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,

fullscreen18 தேசம் எப்படிப்பட்டதென்றும், குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும்,

fullscreen19 அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும்,

fullscreen20 நிலம் எப்படிப்பட்டது, அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும், அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள், தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாயிருந்தது.

fullscreen21 அவர்கள் போய், சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து,

fullscreen22 தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது.

fullscreen23 பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டுபேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள்: மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள்.

fullscreen24 இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்னப்பட்டது.

fullscreen25 அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள்.

fullscreen26 அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையாரனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.

fullscreen27 அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி.

fullscreen28 ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம்.

fullscreen29 அமலேக்கியர் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர் கடல் அருகேயும் யோர்தானண்டையிலும் குடியிருக்கிறார்கள் என்றார்கள்.

fullscreen30 அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.

fullscreen31 அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள்.

fullscreen32 நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம் நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள்.

fullscreen33 அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.

Tamil Indian Revised Version
நான் பயந்த காரியம் எனக்குச் சம்பவித்தது; நான் பயப்பட்டது எனக்கு வந்தது.

Tamil Easy Reading Version
ஏதோ பயங்கரம் எனக்கு நிகழலாம் என அஞ்சியிருந்தேன். அதுவே எனக்கு நிகழ்ந்துள்ளது! நான் மிகவும் அஞ்சியது எனக்கு நேரிட்டது!

Thiru Viviliam
⁽ஏனெனில் நான் அஞ்சியது எதுவோ?␢ அதுவே எனக்கு நேர்ந்தது;␢ திகிலுற்றது எதுவோ␢ அதுவே என்மேல் விழுந்தது.⁾

Job 3:24Job 3Job 3:26

King James Version (KJV)
For the thing which I greatly feared is come upon me, and that which I was afraid of is come unto me.

American Standard Version (ASV)
For the thing which I fear cometh upon me, And that which I am afraid of cometh unto me.

Bible in Basic English (BBE)
For I have a fear and it comes on me, and my heart is greatly troubled.

Darby English Bible (DBY)
For I feared a fear, and it hath come upon me, and that which I dreaded hath come to me.

Webster’s Bible (WBT)
For the thing which I greatly feared hath come upon me, and that which I dreaded hath come to me.

World English Bible (WEB)
For the thing which I fear comes on me, That which I am afraid of comes to me.

Young’s Literal Translation (YLT)
For a fear I feared and it meeteth me, And what I was afraid of doth come to me.

யோபு Job 3:25
நான் பயந்த காரியம் எனக்குநேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது.
For the thing which I greatly feared is come upon me, and that which I was afraid of is come unto me.

For
כִּ֤יkee
the
thing
which
I
greatly
פַ֣חַדpaḥadFA-hahd
feared
פָּ֭חַדְתִּיpāḥadtîPA-hahd-tee
is
come
upon
וַיֶּֽאֱתָיֵ֑נִיwayyeʾĕtāyēnîva-yeh-ay-ta-YAY-nee
which
that
and
me,
וַֽאֲשֶׁ֥רwaʾăšerva-uh-SHER
of
afraid
was
I
יָ֝גֹ֗רְתִּיyāgōrĕttîYA-ɡOH-reh-tee
is
come
יָ֣בֹאyābōʾYA-voh
unto
me.
לִֽי׃lee