எண்ணாகமம் 28

fullscreen1 கர்த்தர் மோசேயை நோக்கி:

fullscreen2 எனக்குச் சுகந்தவாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும் அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு.

fullscreen3 மேலும் நீ அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய தகனபலி என்னவென்றால்: நித்திய சர்வாங்க தகனபலியாக நாடோறும் ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.

fullscreen4 காலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு,

fullscreen5 போஜனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தக் கடவீர்கள்.

fullscreen6 இது சீனாய் மலையிலே கட்டளையிடப்பட்ட நித்திய சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான தகனபலி.

fullscreen7 காற்படி திராட்சரசம் ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடுத்த பானபலி; பரிசுத்த ஸ்தலத்திலே கர்த்தருக்கு அந்த இரசம் பானபலியாக வார்க்கப்படக்கடவது.

fullscreen8 காலையின் போஜனபலிக்கும் அதின் பானபலிக்கும் ஒப்பாகவே மாலையில் மற்ற ஆட்டுக்குட்டியையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.

fullscreen9 ஓய்வுநாளிலோ போஜனபலிக்காக ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.

fullscreen10 நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியும் அதின் பானபலியும் அன்றி ஒவ்வொரு ஒய்வுநாளிலும் இந்தச் சர்வாங்க தகனபலியும் செலுத்தப்படவேண்டும்.

fullscreen11 உங்கள் மாதப்பிறப்புகளில் நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக்கடவீர்கள்.

fullscreen12 போஜனபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், போஜனபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும்,

fullscreen13 போஜனபலியாக ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.

fullscreen14 அவைகளுக்கேற்ற பானபலிகள் திராட்சரசத்தில் காளைக்கு அரைப்படியும், ஆட்டுக்கடாவுக்குப் படியில் மூன்றில் ஒரு பங்கும், ஆட்டுக்குட்டிக்குக் காற்படி ரசமுமாயிருக்கவேண்டும்; இது வருஷ முழுவதும் மாதந்தோறும் செலுத்தப்படவேண்டிய சர்வாங்க தகனபலி.

fullscreen15 நித்தமும் இடப்படும் சர்வாங்க தகனபலியும் அதின் பானபலியும் அன்றி, பாவநிவாரண பலியாகக் கர்த்தருக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும் செலுத்தப்படவேண்டும்.

fullscreen16 முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா.

fullscreen17 அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகைநாள்; ஏழுநாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும்.

fullscreen18 முதலாம் நாளிலே பரிசுத்த சபை கூடுதல் இருக்கவேண்டும்; அன்றைத்தினம் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.

fullscreen19 அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,

fullscreen20 அவைகளுக்கேற்ற போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,

fullscreen21 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,

fullscreen22 உங்கள் பாவநிவர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.

fullscreen23 காலையிலே நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியையும் அன்றி இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்.

fullscreen24 இந்தப்பிரகாரம் ஏழுநாளளவும் நாடோறும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தக்கடவீர்கள்; நித்தமும் செலுத்தப்படும் சர்வாங்க தகனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இதையும் செலுத்தவேண்டும்.

fullscreen25 ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது..

fullscreen26 அந்த வாரங்களுக்குப்பின் நீங்கள் கர்த்தருக்குப் புதிய போஜனபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.

fullscreen27 அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான ஏழு ஆட்டுக்குட்டிகளையும்.

fullscreen28 அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,

fullscreen29 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,

fullscreen30 உங்களுக்காகப் பாவநிவர்த்தி செய்யும்படிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.

fullscreen31 நித்திய சர்வாங்க தகன பலியையும் அதின் போஜனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்; இவைகள் பழுதற்றவைகளாயிருக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
அப்படியே ஆரோன் தன்னுடைய கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது.

Tamil Easy Reading Version
எனவே ஆரோன் எகிப்தின் தண்ணீர் நிலைகள் அனைத்தின்மீதும் தனது கையைத் தூக்கினான். தவளைகள் தண்ணீரிலிருந்து வெளியேறிவர ஆரம்பித்து எகிப்து தேசமெங்கும் நிறைந்தன.

Thiru Viviliam
ஆரோன் தம் கையை எகிப்தின் நீர் நிலைகள் மேல் நீட்டவே, தவளைகள் ஏறிவந்து எகிப்து நாட்டை நிரப்பின.

Exodus 8:5Exodus 8Exodus 8:7

King James Version (KJV)
And Aaron stretched out his hand over the waters of Egypt; and the frogs came up, and covered the land of Egypt.

American Standard Version (ASV)
And Aaron stretched out his hand over the waters of Egypt; and the frogs came up, and covered the land of Egypt.

Bible in Basic English (BBE)
And when Aaron put out his hand over the waters of Egypt, the frogs came up and all the land of Egypt was covered with them.

Darby English Bible (DBY)
And Aaron stretched out his hand over the waters of Egypt; and the frogs came up, and covered the land of Egypt.

Webster’s Bible (WBT)
And Aaron stretched his hand over the waters of Egypt; and the frogs came up, and covered the land of Egypt.

World English Bible (WEB)
Aaron stretched out his hand over the waters of Egypt; and the frogs came up, and covered the land of Egypt.

Young’s Literal Translation (YLT)
And Aaron stretcheth out his hand against the waters of Egypt, and the frog cometh up, and covereth the land of Egypt;

யாத்திராகமம் Exodus 8:6
அப்படியே ஆரோன் தன் கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள் மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது.
And Aaron stretched out his hand over the waters of Egypt; and the frogs came up, and covered the land of Egypt.

And
Aaron
וַיֵּ֤טwayyēṭva-YATE
stretched
out
אַֽהֲרֹן֙ʾahărōnah-huh-RONE

אֶתʾetet
hand
his
יָד֔וֹyādôya-DOH
over
עַ֖לʿalal
the
waters
מֵימֵ֣יmêmêmay-MAY
of
Egypt;
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
frogs
the
and
וַתַּ֙עַל֙wattaʿalva-TA-AL
came
up,
הַצְּפַרְדֵּ֔עַhaṣṣĕpardēaʿha-tseh-fahr-DAY-ah
and
covered
וַתְּכַ֖סwattĕkasva-teh-HAHS

אֶתʾetet
the
land
אֶ֥רֶץʾereṣEH-rets
of
Egypt.
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem