பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.
கெர்சோன் புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை இதுதான்; அவர்களை வேலைகொள்ளும் விசாரணை, ஆசாரியனாகிய ஆரோரின் குமாரன் இத்தாமாருடைய கைக்குள் இருக்கவேண்டும்.
ஆசரிப்புக் கூடாரத்தில் அவர்கள் செய்யும் எல்லாப் பணிவிடைக்கும் அடுத்த காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும்,
ஆசாரியனாகிய ஆரோனுடைய குமாரனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி புத்திரரின் வம்சத்தாரர் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார்.
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயினாலும் ஆரோனாலும் கோகாத் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்கிறதற்காக, எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே.
மோசேயினாலும் ஆரோனாலும் கர்த்தர் கட்டளையிட்டபடியே கெர்சோன் புத்திரரின் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலைசெய்ய எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே.
| This | זֹ֛את | zōt | zote |
| shall be the service | עֲבֹדַ֥ת | ʿăbōdat | uh-voh-DAHT |
| of the sons | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| of Kohath | קְהָ֖ת | qĕhāt | keh-HAHT |
| in the tabernacle | בְּאֹ֣הֶל | bĕʾōhel | beh-OH-hel |
| of the congregation, | מוֹעֵ֑ד | môʿēd | moh-ADE |
| about the most | קֹ֖דֶשׁ | qōdeš | KOH-desh |
| holy things: | הַקֳּדָשִֽׁים׃ | haqqŏdāšîm | ha-koh-da-SHEEM |