Psalm 2 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽வேற்றினத்தார் சீறி எழுவதேன்?␢ மக்களினங்கள் வீணாகச்␢ சூழ்ச்சி செய்வதேன்?⁾2 ⁽ஆண்டவருக்கும் அவர்தம் அருள் பொழிவு␢ பெற்றவர்க்கும் எதிராகப்␢ பூவுலகின் அரசர்கள்␢ அணிவகுத்து நிற்கின்றார்கள்;␢ ஆள்வோர் ஒன்றுகூடிச்␢ சதிசெய்கின்றார்கள்;⁾3 ⁽‛அவர்கள் பூட்டிய தளைகளைத்␢ தகர்ப்போம்;␢ அவர்கள் வைத்த கண்ணிகளை␢ நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்’ § என்கின்றார்கள்.⁾4 ⁽விண்ணுலகில் வீற்றிருப்பவர்␢ எள்ளி நகைக்கின்றார்;␢ என் தலைவர் அவர்களைப் பார்த்து␢ ஏளனம் செய்கின்றார்.⁾5 ⁽அவர் சினமுற்று␢ அவர்களை மிரட்டுகின்றார்;␢ கடுஞ்சினத்தால் அவர்களைக்␢ கலங்கடிக்கின்றார்;⁾6 ⁽‛என் திருமலையாகிய சீயோனில்␢ நானே என் அரசரைத்␢ திருநிலைப்படுத்தனேன்.’⁾7 ⁽ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை␢ நான் அறிவிக்கின்றேன்;␢ ‛நீர் என் மைந்தர்; இன்று நான்␢ உம்மைப் பெற்றெடுத்தேன்.⁾8 ⁽நீர் விரும்புவதை என்னிடம் கேளும்;␢ பிறநாடுகளை உமக்கு␢ உரிமைச் சொத்தாக்குவேன்;␢ பூவுலகை அதன் கடையெல்லைவரை␢ உமக்கு உடைமையாக்குவேன்.⁾9 ⁽இருப்புக் கோலால்␢ நீர் அவர்களைத் தாக்குவீர்;␢ குயவன் கலத்தைப்போல␢ அவர்களை நொறுக்குவீர்.’⁾10 ⁽ஆகவே, மன்னர்களே,␢ விவேகமாக நடந்துகொள்ளுங்கள்;␢ பூவுலகை ஆள்வோரே,␢ எச்சரிக்கையாயிருங்கள்.⁾11 ⁽அச்சத்தோடு ஆண்டவரை␢ வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்!␢ அவர்முன் அக மகிழுங்கள்!⁾12 ⁽அவர் சினங்கொள்ளாதபடியும்␢ நீங்கள் வழியில் அழியாதபடியும்␢ அவரது காலடியை முத்தமிடுங்கள்;␢ இல்லையேல், அவரது சினம்␢ விரைவில் பற்றியெரியும்;␢ அவரிடம் அடைக்கலம் புகுவோர்␢ அனைவரும் பேறுபெற்றோர்.⁾