Psalm 76 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽யூதாவில் கடவுள் தம்மையே␢ வெளிப்படுத்தியுள்ளார்;␢ இஸ்ரயேலில் அவரது பெயர்␢ மாண்புடன் திகழ்கின்றது.⁾2 ⁽எருசலேமில் அவரது கூடாரம்␢ இருக்கின்றது; சீயோனில்␢ அவரது உறைவிடம் இருக்கின்றது.⁾3 ⁽அங்கே அவர் மின்னும் அம்புகளை␢ முறித்தெறிந்தார்.␢ கேடயத்தையும் வாளையும்␢ படைக்கலன்களையும்␢ தகர்த்தெறிந்தார். (சேலா)⁾4 ⁽ஆண்டவரே, நீர் ஒளிமிக்கவர்;␢ உமது மாட்சி என்றுமுள␢ மலைகளினும் உயர்ந்தது.⁾5 ⁽நெஞ்சுறுதி கொண்ட வீரர்␢ கொள்ளையிடப்பட்டனர்;␢ அவர்கள் துயிலில் ஆழ்ந்துவிட்டனர்;␢ அவர்களின் கைகள்␢ போர்க்கலன்களைத் தாங்கும்␢ வலுவிழந்தன.⁾6 ⁽யாக்கோபின் கடவுளே,␢ உமது கடிந்துரையால்␢ குதிரைகளும் வீரர்களும்␢ மடிந்து விழுந்தனர்.⁾7 ⁽ஆண்டவரே,␢ நீர் அஞ்சுதற்கு உரியவர்;␢ நீர் சினமுற்ற வேளையில்␢ உம் திருமுன் நிற்கக்கூடியவர் யார்?⁾8 ❮8-9❯⁽கடவுளே! நீதித் தீர்ப்பளிக்க␢ நீர் எழுந்தபோது,␢ மண்ணுலகில் ஒடுக்கப்பட்டோரைக்␢ காக்க விழைந்தபோது,␢ வானின்று தீர்ப்பு முழங்கச் செய்தீர்;␢ பூவுலகு அச்சமுற்று அடங்கியது. (சேலா)⁾9 Same as above10 ⁽மாறாக, சினமுற்ற மாந்தர்,␢ உம்மைப் புகழ்தேத்துவர்;␢ உமது கோபக் கனலுக்குத் தப்பியோர்␢ உமக்கு விழாக்கொண்டாடுவர்;⁾11 ⁽உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப்␢ பொருத்தனை செய்து␢ அதை நிறைவேற்றுங்கள்;␢ அவரைச் சுற்றலுமிருக்கிற அனைவரும்␢ அஞ்சுதற்குரிய அவருக்கே␢ காணிக்கைகளைக் § கொண்டு வருவராக!⁾12 ⁽செருக்குற்ற தலைவர்களை␢ அவர் அழிக்கின்றார்;␢ பூவுலகின் அரசர்க்குப் பேரச்சம் ஆனார்.⁾Psalm 76 ERV IRV TRV