அவர்கள் அறுப்பறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பிறகே போ; ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களண்டைக்குப் போய், வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்.
அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும் உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.
பின்னும் போவாஸ் சாப்பாட்டு வேளையில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்திலே புசித்து, காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக்கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பறுக்கிறவர்கள் அருகே உட்கார்ந்தாள், அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீந்ததை வைத்துக்கொண்டாள்.
அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம் பண்ணவேண்டாம்.
அவள் பொறுக்கிக்கொள்ளும் படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.
பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்: அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும், நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள்.
அப்பொழுது நகோமி தன் மருமகளாகிய ரூத்தைப் பார்த்து: என் மகளே, வேறொரு வயலிலே மனுஷர் உன்னை எதிர்க்காதபடிக்கு நீ அவன் வேலைக்காரிகளோடே போகிறது நல்லது என்றாள்.
Then said | וַיֹּאמֶר֩ | wayyōʾmer | va-yoh-MER |
Boaz | בֹּ֨עַז | bōʿaz | BOH-az |
unto | אֶל | ʾel | el |
Ruth, | ר֜וּת | rût | root |
not, | הֲל֧וֹא | hălôʾ | huh-LOH |
thou Hearest | שָׁמַ֣עַתְּ | šāmaʿat | sha-MA-at |
my daughter? | בִּתִּ֗י | bittî | bee-TEE |
not | אַל | ʾal | al |
Go | תֵּֽלְכִי֙ | tēlĕkiy | tay-leh-HEE |
to glean | לִלְקֹט֙ | lilqōṭ | leel-KOTE |
field, another | בְּשָׂדֶ֣ה | bĕśāde | beh-sa-DEH |
in | אַחֵ֔ר | ʾaḥēr | ah-HARE |
neither | וְגַ֛ם | wĕgam | veh-ɡAHM |
לֹ֥א | lōʾ | loh | |
go | תַֽעֲבוּרִ֖י | taʿăbûrî | ta-uh-voo-REE |
from hence, | מִזֶּ֑ה | mizze | mee-ZEH |
but | וְכֹ֥ה | wĕkō | veh-HOH |
abide | תִדְבָּקִ֖ין | tidbāqîn | teed-ba-KEEN |
here fast by | עִם | ʿim | eem |
my maidens: | נַֽעֲרֹתָֽי׃ | naʿărōtāy | NA-uh-roh-TAI |