Full Screen ?
 

Azhagai Nirkkum - அழகாய் நிற்கும் யார்

அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?

ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ, பெரிதானதோ பெற்ற பணி
செய்து முடித்தோர் – அழகாய்

காடு மேடு கடந்த சென்று
கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள் – அழகாய்

தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும், போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் – அழகாய்

எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் – அழகாய்

Azhagai Nirkkum – அழகாய் நிற்கும் யார் Lyrics in English

Alakaay nirkum yaar ivarkal? Thiralaay nirkum yaar ivarkal? Senaith thalaivaraam Yesuvin pottalaththil alakaay nirkum yaar ivarkal? Oru thaalantho, iranndu thaalantho ainthu thaalantho upayokiththor sirithaanatho, perithaanatho petta panni seythu mutiththor – alakaay kaadu maedu kadantha sentu Karththar anpaip pakirnthavarkal uyarvinilum thaalvinilum ookkamaaka jepiththavarkal – alakaay thanimaiyilum varaுmaiyilum laasaru pontu nintavarkal yaasiththaalum, poshiththaalum visuvaasaththaik kaaththavarkal – alakaay ellaa jaathiyaar ellaak koththiram ellaa moliyum paesum makkalaam siluvaiyin geel Yesu iraththaththaal seer poraattam seythu mutiththor – alakaay

PowerPoint Presentation Slides for the song Azhagai Nirkkum – அழகாய் நிற்கும் யார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhagai Nirkkum – அழகாய் நிற்கும் யார் PPT
Azhagai Nirkkum PPT

அழகாய் நிற்கும் இவர்கள் தாலந்தோ செய்து முடித்தோர் எல்லா திரளாய் சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில் இரண்டு ஐந்து உபயோகித்தோர் சிறிதானதோ பெரிதானதோ பெற்ற பணி தமிழ்