Full Screen ?
 

Immattum Jeevan Thantha Beryl Natasha - இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய்த் ஸ்தோத்தரிப்போமாக-2
நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து-2
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்-2 – இம்மட்டும்

1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும்,
கனாவைப் போலேயும் ஒழியும்;
வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும்,
மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது
கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே-2
கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக்
கண்டு கருணைகள் விண்டு தயவுடன்-இம்மட்டும்

2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்
பரம பாதையைத் தொடர்ந்தோம்
வலிய தீமையை வென்றோம் , நலியும் ஆசையைக் கொன்றோம் ,
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ;
கலிஎன்ற தெல்லாம் விண்டோம் , கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்;
காய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம்
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் — இம்மட்டும்

3. சனசேதம் வருவிக்கும் , கேடுகட்கோர் முடிவு
தந்து , நொறுங்கினதைக் கட்டிக்
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று
தினமும் அருள் உதிக்கச் செய்து , தமது தேவ
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
மைந்தனால் எங்களை இந்த வினோதமாய் — இம்மட்டும்

Immattum Jeevan Thantha Beryl Natasha Lyrics in English

Immattum jeevan thantha karththaavai aththiyantha ennnamaayth sthoththarippomaaka-2 nammai ratchikka vanthu thammai paliyaayth thanthu-2 narsukam maevavum arputhamaakavum-2 – immattum 1. Kaalamsol pol kaliyum, thannnneeraippol vatiyum, kanaavaip polaeyum oliyum; vaalipamum maraiyum, seelam ellaam kuraiyum, mannnin vaal vontum nirka maattathu kolap pathumaikkum, neerka kumilikkum, pukaikkumae-2 konnda ulakaththil anndaparan emaik kanndu karunnaikal vinndu thayavudan-immattum 2. Palavitha ikkattaைyum thikilkalaiyum kadanthom parama paathaiyaith thodarnthom valiya theemaiyai ventom , naliyum aasaiyaik kontom , vanjar pakaikkum thappi nintom ; kalienta thellaam vinntoom , karththaavin meetpaik kanntoom; kaayntha manathodu paaynthuvilu kanam saaynthu kedavum aaraaynthu neriyudan — immattum 3. Sanasetham varuvikkum , kaedukatkor mutivu thanthu , noraுnginathaik kattik kana Sabaiyai aatharith thanpaay aaseervathiththuk kannnnokki ellaarmael antantu thinamum arul uthikkach seythu , thamathu thaeva sinthai yinodathi vinthaiyathaay uyir mainthanaal engalai intha vinothamaay — immattum

PowerPoint Presentation Slides for the song Immattum Jeevan Thantha Beryl Natasha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immattum Jeevan Thantha Beryl Natasha – இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த PPT
Immattum Jeevan Thantha Beryl Natasha PPT

இம்மட்டும் தந்து ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய்த் ஸ்தோத்தரிப்போமாக நம்மை ரட்சிக்க தம்மை பலியாய்த் நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் காலம்சொல் கழியும் தண்ணீரைப்போல் தமிழ்