Full Screen ?
 

Vizukuthu Vizukuthu Eriko Kottai - விழுகுது விழுகுது எரிகோ கோட்டை

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை
எழும்புது எழும்புது இயேசுவின் படை

துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்
துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம்

1.யோசுவாவின் சந்ததி நாமே
தேசத்தைச் சுதந்தரிப்போமே
உடன்படிக்கை பெட்டி நம்மோடு
ஊர் ஊராய் வலம் வருவோமே – துதிப்போம்

2.கால் மிதிக்கும் எவ்விடத்தையும்
கர்த்தர் தந்திடுவாரே
எதிர்த்து நிற்க எவராலுமே
முடியாதென்று வாக்குரைத்தாரே

3.மோசேயோடு இருந்ததுபோல
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
தளபதியாய் முன் செல்கிறார்
தளர்ந்திடாமல் பின் தொடர்வேம்

4.அச்சமின்றி துணிந்து செல்வோமே
அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே
கர்த்தர் வார்த்தை நம் வாயிலே
நிச்சயமாய் வெற்றி பெறுவோம்

5.தேசத்து எதிரிகளெல்லாம்
திகில் பிடித்து நடுங்குகின்றனர்
கர்த்தர் செய்யும் அற்புதங்களை
கேள்விப்பட்டு கலங்குகின்றனர்

6.செங்கடலை வற்றச் செய்தவர்
சீக்கிரத்தில் வெற்றி தருவார்
யோர்தானை நிற்கச் செய்தவர் – நம்
பாரதத்தை ஆளுகை செய்வார்

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை – Vizukuthu Vizukuthu Eriko Kottai Lyrics in English

Vilukuthu vilukuthu eriko kottaை elumputhu elumputhu Yesuvin patai thuthippom saaththaanai jeyippom thuthippom thaesaththaich sonthamaakkuvom 1.yosuvaavin santhathi naamae thaesaththaich suthantharippomae udanpatikkai petti nammodu oor ooraay valam varuvomae – thuthippom 2.kaal mithikkum evvidaththaiyum Karththar thanthiduvaarae ethirththu nirka evaraalumae mutiyaathentu vaakkuraiththaarae 3.Mosesyodu irunthathupola senaikalin Karththar nammodu thalapathiyaay mun selkiraar thalarnthidaamal pin thodarvaem 4.achchaminti thunninthu selvomae arikkai seythu aarpparippomae Karththar vaarththai nam vaayilae nichchayamaay vetti peraுvom 5.thaesaththu ethirikalellaam thikil pitiththu nadungukintanar Karththar seyyum arputhangalai kaelvippattu kalangukintanar 6.sengadalai vattach seythavar seekkiraththil vetti tharuvaar yorthaanai nirkach seythavar – nam paarathaththai aalukai seyvaar

PowerPoint Presentation Slides for the song விழுகுது விழுகுது எரிகோ கோட்டை – Vizukuthu Vizukuthu Eriko Kottai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vizukuthu Vizukuthu Eriko Kottai – விழுகுது விழுகுது எரிகோ கோட்டை PPT
Vizukuthu Vizukuthu Eriko Kottai PPT

கர்த்தர் துதிப்போம் விழுகுது எழும்புது தேசத்தைச் நம்மோடு நம் வெற்றி செய்தவர் எரிகோ கோட்டை இயேசுவின் படை சாத்தானை ஜெயிப்போம் சொந்தமாக்குவோம் யோசுவாவின் சந்ததி நாமே தமிழ்