உன்னதப்பாட்டு 8

fullscreen1 ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால், நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; என்னை நிந்திக்கவுமாட்டார்கள்.

fullscreen2 நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்; நீர் என்னைப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சரசத்தையும், என் மாதளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்.

fullscreen3 அவர் இடதுகை என் தலையின் கீழிருக்கும், அவர் வலதுகை என்னை அணைக்கும்.

fullscreen4 எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களை ஆணையிடுகிறேன்.

fullscreen5 தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்? கிச்சிலிமரத்தின் கீழ் உம்மை எழுப்பினேன்; அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள்.

fullscreen6 நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது.

fullscreen7 திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்.

fullscreen8 நமக்கு ஒரு சிறிய சகோதரியுண்டு, அவளுக்கு ஸ்தனங்களில்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும்நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?

fullscreen9 அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.

fullscreen10 நான் மதில்தான், என் ஸ்தனங்கள் கோபுரங்கள்; அவருடைய கண்களில் கடாட்சம்பெறலானேன்.

fullscreen11 பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட்டார்.

fullscreen12 என் திராட்சத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் கனியைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.

fullscreen13 தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும்.

fullscreen14 என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.

Tamil Indian Revised Version
உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாகக் கைக்கொள்ளும்படி நீர் கற்றுக்கொடுத்தீர்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் எங்களுக்கு உமது கட்டளைகளைக் கொடுத்தீர். அந்தக் கட்டளைகளுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியுமாறு கூறினீர்.

Thiru Viviliam
⁽ஆண்டவரே!␢ நீர் உம் நியமங்களைத் தந்தீர்;␢ அவற்றை நாங்கள் முழுமையாய்க்␢ கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.⁾

சங்கீதம் 119:3சங்கீதம் 119சங்கீதம் 119:5

King James Version (KJV)
Thou hast commanded us to keep thy precepts diligently.

American Standard Version (ASV)
Thou hast commanded `us’ thy precepts, That we should observe them diligently.

Bible in Basic English (BBE)
You have put your orders into our hearts, so that we might keep them with care.

Darby English Bible (DBY)
Thou hast enjoined thy precepts, to be kept diligently.

World English Bible (WEB)
You have commanded your precepts, That we should fully obey them.

Young’s Literal Translation (YLT)
Thou hast commanded us Thy precepts to keep diligently,

சங்கீதம் Psalm 119:4
உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர்.
Thou hast commanded us to keep thy precepts diligently.

Thou
אַ֭תָּהʾattâAH-ta
hast
commanded
צִוִּ֥יתָהṣiwwîtâtsee-WEE-ta
us
to
keep
פִקֻּדֶ֗יךָpiqqudêkāfee-koo-DAY-ha
thy
precepts
לִשְׁמֹ֥רlišmōrleesh-MORE
diligently.
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE