மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும் இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,
வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும்,
அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரை தண்டிப்பேன்.
அவர்களுடைய ஆஸ்தி கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக்கட்டியும் அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்த்தோட்டங்களை நாட்டியும், அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.
கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும், தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.
| And them that are turned back | וְאֶת | wĕʾet | veh-ET |
| from | הַנְּסוֹגִ֖ים | hannĕsôgîm | ha-neh-soh-ɡEEM |
| the Lord; | מֵאַחֲרֵ֣י | mēʾaḥărê | may-ah-huh-RAY |
| and those that | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| have not | וַאֲשֶׁ֛ר | waʾăšer | va-uh-SHER |
| sought | לֹֽא | lōʾ | loh |
| בִקְשׁ֥וּ | biqšû | veek-SHOO | |
| the Lord, | אֶת | ʾet | et |
| nor | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| inquired | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| for him. | דְרָשֻֽׁהוּ׃ | dĕrāšuhû | deh-ra-shoo-HOO |