1. அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணை நீயே;
இருள் சேர்ந்திடுமிவ்வேளையிலே இன்னலொன்றுந் தொடராமல்,
மருண்டு மனது பிறழாமல், வஞ்சத்தொழிலிற் செல்லாமல்,
கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந் துதியுனக் கொருகோடி. – சுவாமி ஒரு கோடி,
2. சென்றநாட்களனைத்திலும் சிறியேன் தனக்குச் செய்துவந்த
நன்றாம் நன்மைகளனைத்திற்கும் நவிலற்கரிய தயைகளுக்கும்,
என்றுமழியா வரங்களுக்கும் ஏழையடியேன் மிகத் தாழ்ந்து
கன்று நினைந்து கதறுதல்போல் கழறுந்துதியுனக் கொருகோடி. – சுவாமி ஒரு கோடி,
3. பற்றொன்றில்லாப் பரம்பொருளே! பரமானந்த சற்குருவே!
வற்றாஞான சமுத்திரமே! வடுவொன்றில்லா வான் பொருளே!
பெற்றோர், உற்றோருலகனைத்தும் பிரியமுடனே சுகித்திருக்கக்
கற்றில்லாத மிகச் சிறியேன் கழறுந்தியுனக் கொருகோடி. – சுவாமி ஒரு கோடி,
4. பத்தியதனாலுனைப் பாடிப் பணிந்தேயென்றும் வாழ்ந்திருக்க,
நத்தும் இரவு முழுதனைத்தும்நாதா என்னைக்காத்தருளி,
முத்தியென்னும் மோட்சநிலை முடிவிலடியேன் தன்னைச்சேர்க்கக்
கத்தியலறிப் பரவசமாய்க் கழறுந்துதியுனக் கொருகோடி. – சுவாமி ஒரு கோடி,
Arulae Porulae Aaraname – அருளே பொருளே ஆரணமே Lyrics in English
1. Arulae! Porulae! Aaranamae allumpakalunthunnai neeyae;
Irul sernthidumivvaelaiyilae innalontun thodaraamal,
Marunndu manathu piralaamal, vanjaththolilir sellaamal,
Karunnaakaranae! Enaikkaakkak kalaraுn thuthiyunak korukoti. – suvaami oru koti,
2. Sentanaatkalanaiththilum siriyaen thanakkuch seythuvantha
Nantam nanmaikalanaiththirkum navilarkariya thayaikalukkum,
Entumaliyaa varangalukkum aelaiyatiyaen mikath thaalnthu
Kantu ninainthu katharaுthalpol kalaraுnthuthiyunak korukoti. – suvaami oru koti,
3. Pattaொntillaap paramporulae! Paramaanantha sarkuruvae!
Vattaாnjaana samuththiramae! Vaduvontillaa vaan porulae!
Pettaோr, uttaோrulakanaiththum piriyamudanae sukiththirukkak
Kattillaatha mikach siriyaen kalaraுnthiyunak korukoti. – suvaami oru koti,
4. Paththiyathanaalunaip paatip panninthaeyentum vaalnthirukka,
Naththum iravu muluthanaiththumnaathaa ennaikkaaththaruli,
Muththiyennum motchanilai mutivilatiyaen thannaichchaேrkkak
Kaththiyalarip paravasamaayk kalaraுnthuthiyunak korukoti. – suvaami oru koti,
PowerPoint Presentation Slides for the song Arulae Porulae Aaraname – அருளே பொருளே ஆரணமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arulae Porulae Aaraname – அருளே பொருளே ஆரணமே PPT
Arulae Porulae Aaraname PPT

