Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arputham Paavi Naan Meetkapaten - அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன்

அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham paavi naan meetkapaten

பல்லவி

அற்புதம்! பாவி நான் மீட்கப்பட்டேன்;
மீட்கப்பட்டேன் நான் இரட்சிக்கப்பட்டேன்

அனுபல்லவி

சற்றாகிலும் கிருபை பெற
முற்றும் அபாத்திரனான போதும்

சரணங்கள்
1. உலகத்தின் சிற்றின்பப் பாசங்களும்
பலவித மாமிச சிந்தைகளும்
பாவி என்னிதயத்தை வதைத்தபோது
பாவ விமோசனார் கிருபை கூர்ந்தார் – அற்

2. மாய்மால ஜீவியம் செய்துகொண்டு
வாய்ப்பேச்சினால் மட்டும் பூசை செய்தேன்;
நீண்ட ஜெபங்களைச் செய்வதினால்
மீண்டு மோக்ஷம் போகக் காத்திருந்தேன் – அற்

3. சன்மார்க்க வேஷத்தைத் தரித்துக்கொண்டு
துன்மார்க்கப் பாதையில் தாம் நடந்து
வேதப் புரட்டாய்த் திரிந்தவரின்
ஓதுதல் கேட்டு நான் கெட்டலைந்தேன் – அற்

4. நான் செய்த தீவினையுணர்ந்து எந்தன்
வான பிதாவண்டை ஓடி வந்து
மெய் மனஸ்தாப அழுகையுடன்
ஐயனே! இரட்சியும் என்றவுடன் – அற்

5. இந்த மா இரட்சையை நம்பாயோ நீ?
வந்து பார் மீட்பரின் சிலுவையண்டை!
ஓடுகின்ற இந்த சிவந்த நதி
தேடி வருவோர்க்கு உயிரைத் தரும் – அற்

அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham Paavi Naan Meetkapaten Lyrics in English

Arputham paavi naan meetkappattaேn – Arputham paavi naan meetkapaten pallavi arputham! Paavi naan meetkappattaேn; meetkappattaேn naan iratchikkappattaேn anupallavi sattaாkilum kirupai pera muttaுm apaaththiranaana pothum saranangal 1. Ulakaththin sittinpap paasangalum palavitha maamisa sinthaikalum paavi ennithayaththai vathaiththapothu paava vimosanaar kirupai koornthaar – ar 2. Maaymaala jeeviyam seythukonndu vaayppaechchinaal mattum poosai seythaen; neennda jepangalaich seyvathinaal meenndu moksham pokak kaaththirunthaen – ar 3. Sanmaarkka vaeshaththaith thariththukkonndu thunmaarkkap paathaiyil thaam nadanthu vaethap purattayth thirinthavarin othuthal kaettu naan kettalainthaen – ar 4. Naan seytha theevinaiyunarnthu enthan vaana pithaavanntai oti vanthu mey manasthaapa alukaiyudan aiyanae! Iratchiyum entavudan – ar 5. Intha maa iratchaைyai nampaayo nee? Vanthu paar meetparin siluvaiyanntai! Odukinta intha sivantha nathi thaeti varuvorkku uyiraith tharum – ar

PowerPoint Presentation Slides for the song அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham Paavi Naan Meetkapaten

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arputham Paavi Naan Meetkapaten – அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் PPT
Arputham Paavi Naan Meetkapaten PPT

அற் பாவி மீட்கப்பட்டேன் அற்புதம் கிருபை Arputham paavi naan meetkapaten பல்லவி இரட்சிக்கப்பட்டேன் அனுபல்லவி சற்றாகிலும் பெற முற்றும் அபாத்திரனான போதும் சரணங்கள் உலகத்தின் தமிழ்