Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Christhuvin Anbu Athu Unnatha Anbu - கிறிஸ்துவின் அன்பு அது உன்னத அன்பு

கிறிஸ்துவின் அன்பு அது உன்னத அன்பு
என் இயேசுவின் அன்பு இணையில்லா அன்பு (2)

பாவ சேற்றில் மூழ்கியே பாதை மாறினேன்
பாவி என்னை தேடியே அன்பாய் வந்தீரே (2)
இரத்தம் சிந்தி என்னையும் மீட்டு கொண்டீரே
இரட்சகரின் அன்பை எண்ணி நித்தம் பாடுவேன் (2)

கஷ்டம் நஷ்டம் சோதனைகள் சூழ்ந்து வந்தது
கர்த்தர் அன்பு நித்தம் என்னை தாங்கி கொண்டது(2)
சோர்வை நீக்கும் நேசர் அன்பென்னை மூடி கொண்டது
தேற்றும் நேசரின் மார்பில் சாய்ந்து நித்தம் ஜீவிப்பேன் (2)

ஆத்ம நேசர் அன்பு என்னை நெருக்கி ஏவுதே
அன்பால் நிறைந்து அவர் பணி நித்தம் செய்வேனே(2)
நேசத்தழல் என்னில் என்றும் பற்றியெரியுதே
நேசருக்காய் ஜீவன் வைத்து சேவை செய்வேனே(2)

Christhuvin Anbu Athu Unnatha Anbu Lyrics in English

Kristhuvin anpu athu unnatha anpu en Yesuvin anpu innaiyillaa anpu (2) paava settil moolkiyae paathai maarinaen paavi ennai thaetiyae anpaay vantheerae (2) iraththam sinthi ennaiyum meettu konnteerae iratchakarin anpai ennnni niththam paaduvaen (2) kashdam nashdam sothanaikal soolnthu vanthathu Karththar anpu niththam ennai thaangi konndathu(2) sorvai neekkum naesar anpennai mooti konndathu thaettaுm naesarin maarpil saaynthu niththam jeevippaen (2) aathma naesar anpu ennai nerukki aevuthae anpaal nirainthu avar panni niththam seyvaenae(2) naesaththalal ennil entum pattiyeriyuthae naesarukkaay jeevan vaiththu sevai seyvaenae(2)

PowerPoint Presentation Slides for the song Christhuvin Anbu Athu Unnatha Anbu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Christhuvin Anbu Athu Unnatha Anbu – கிறிஸ்துவின் அன்பு அது உன்னத அன்பு PPT
Christhuvin Anbu Athu Unnatha Anbu PPT

அன்பு நித்தம் என்னை கொண்டது நேசர் செய்வேனே கிறிஸ்துவின் உன்னத இயேசுவின் இணையில்லா பாவ சேற்றில் மூழ்கியே பாதை மாறினேன் பாவி தேடியே அன்பாய் வந்தீரே தமிழ்