இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிகத் தோத்திரம்
1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது — இயேசு
2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது
நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே — இயேசு
3. பாவத்திலே மாளும் பாவியை மீட்கப்
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது — இயேசு
4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது — இயேசு
5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடைமுற்று மகற்றிடும் நாமமது — இயேசு
Yesu Enta Thirunaamaththirku Lyrics in English
Yesu enta thirunaamaththirku eppothumae mikath thoththiram 1. Vaanilum poovilum maelaana naamam vallamaiyulla naamamathu thooyar sollith thuthiththidum naamamathu — Yesu 2. Vaethaalam paathaalam yaavaiyum jeyiththa veeramulla thiru naamamathu naamum ventiduvomintha naamaththilae — Yesu 3. Paavaththilae maalum paaviyai meetkap paarinil vantha mey naamamathu paralokaththil serkkum naamamathu — Yesu 4. Uththama paktharkal pottith thuthiththidum unnatha thaevanin naamamathu ulakengum joliththidum naamamathu — Yesu 5. Sanjalam varuththam sothanai naeraththil thaangi nadaththidum naamamathu thataimuttaு makattidum naamamathu — Yesu
PowerPoint Presentation Slides for the song Yesu Enta Thirunaamaththirku
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Enta Thirunaamaththirku – இயேசு என்ற திருநாமத்திற்கு PPT
Yesu Enta Thirunaamaththirku PPT

