நீர் செய்த நன்மைகளை நினைக்கிறேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன் (2)
நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரைப் பாடுவேன் (2)
1. என் தாயின் கருவிலே நான் உருவான நாள் முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே (2) — நன்றி
2. பாவியாக நான் வாழ்ந்து பாவஞ்செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே
நான் உம்மை விட்டு தூரம் சென்று துரோகம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே (2) — நன்றி
3. நான் திக்கற்று துணையின்றி திகைத்திட்ட நேரத்தில்
துணையாக தேடிவந்தீரே
நான் துக்கத்தால் மனம் நொந்து மடிகின்ற நேரத்தில்
மகன் என்னை தேடி வந்தீரே (2) — நன்றி
4. நான் மனதார நேசித்த மனிதர்கள் மறந்தாலும்
மறவாத நேசர் நீரையா
சூழ்நிலைகள் மாறிட்டாலும் மாறிடா உம் கிருபையாலே
நாள்தோறும் தாங்கினீரையா (2) — நன்றி
Neer Seytha Nanmaikalai Ninaikkiraen Lyrics in English
Neer seytha nanmaikalai ninaikkiraேn karuththodu nanti solkiraேn (2) nanti nanti pali seluththiyae naathan Yesuvaiyae paaduvaen koti nanti pali seluththiyae jeevan thanthavaraip paaduvaen (2) 1. En thaayin karuvilae naan uruvaana naal muthal naalthoraுm kaaththu vantheerae en naasiyaalae naan suvaasiththa naal muthal naalthoraுm kaaththu vantheerae (2) — nanti 2. Paaviyaaka naan vaalnthu paavanjaெytha naatkalilum naalthoraுm kaaththu vantheerae naan ummai vittu thooram sentu thurokam seytha naatkalilum naalthoraுm kaaththu vantheerae (2) — nanti 3. Naan thikkattaு thunnaiyinti thikaiththitta naeraththil thunnaiyaaka thaetivantheerae naan thukkaththaal manam nonthu matikinta naeraththil makan ennai thaeti vantheerae (2) — nanti 4. Naan manathaara naesiththa manitharkal maranthaalum maravaatha naesar neeraiyaa soolnilaikal maarittalum maaridaa um kirupaiyaalae naalthoraுm thaangineeraiyaa (2) — nanti
PowerPoint Presentation Slides for the song Neer Seytha Nanmaikalai Ninaikkiraen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Seytha Nanmaikalai Ninaikkiraen – நீர் செய்த நன்மைகளை நினைக்கிறேன் PPT
Neer Seytha Nanmaikalai Ninaikkiraen PPT

