Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvae, Ummai Thiyaaniththaal - 1. இயேசுவே, உம்மை தியானித்தால்

1. இயேசுவே, உம்மை தியானித்தால்
உள்ளம் கனியுமே;
கண்ணார உம்மைக் காணுங்கால்
பரமானந்தமே.

2. மானிட மீட்பர் இயேசுவின்
சீர் நாமம் போலவே,
இன் கீத நாதம் ஆய்ந்திடின்
உண்டோ இப்பாரிலே?

3. நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு
நம்பிக்கை ஆகுவீர்;
நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு
சந்தோஷம் ஈகுவீர்.

4. கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர்

ஈவீர் எந்நன்மையும்;
கண்டடைந்தோரின் பாக்கிய சீர்
யார் சொல்ல முடியும்?

5. இயேசுவின் அன்பை உணர்ந்து
மெய் பக்தர் அறிவார்;
அவ்வன்பின் ஆழம் அளந்து
மற்றோர் அறிந்திடார்.

6. இயேசுவே, எங்கள் முக்தியும்
பேரின்பமும் நீரே;
இப்போதும் நித்திய காலமும்
நீர் எங்கள் மாட்சியே.

Yesuvae, Ummai Thiyaaniththaal Lyrics in English

1. Yesuvae, ummai thiyaaniththaal ullam kaniyumae; kannnnaara ummaik kaanungaal paramaananthamae. 2. Maanida meetpar Yesuvin seer naamam polavae, in geetha naatham aaynthitin unntoo ippaarilae? 3. Neer noraுngunnda nenjukku nampikkai aakuveer; neer saanthamulla maantharkku santhosham eekuveer. 4. Kaetporkkum thaeduvorkkum neer eeveer ennanmaiyum; kanndatainthorin paakkiya seer yaar solla mutiyum? 5. Yesuvin anpai unarnthu mey pakthar arivaar; avvanpin aalam alanthu mattaோr arinthidaar. 6. Yesuvae, engal mukthiyum paerinpamum neerae; ippothum niththiya kaalamum neer engal maatchiyae.

PowerPoint Presentation Slides for the song Yesuvae, Ummai Thiyaaniththaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae, Ummai Thiyaaniththaal – 1. இயேசுவே, உம்மை தியானித்தால் PPT
Yesuvae, Ummai Thiyaaniththaal PPT

நீர் இயேசுவே இயேசுவின் சீர் எங்கள் உம்மை தியானித்தால் உள்ளம் கனியுமே கண்ணார உம்மைக் காணுங்கால் பரமானந்தமே மானிட மீட்பர் நாமம் போலவே இன் தமிழ்