Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvin Kaikal Kaakka - இயேசுவின் கைகள் காக்க

1. இயேசுவின் கைகள் காக்க,
மார்பினில் சாருவேன்;
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்.
பளிங்குக் கடல் மீதும்
மாட்சி நகர்நின்றும்
தூதரின் இன்ப கீதம்
பூரிப்புண்டாக்கிவிடும்.

2. இயேசுவின் கைகள் காக்க,
பாழ்லோகின் கவலை
சோதனை பாவக் கேடும்
தாக்காது உள்ளத்தை;
கஷ்டம் துக்கம் கண்ணீரும்
காணாமல் நீங்குமே;
வதைக்கும் துன்பம் நோவும்
விரைவில் தீருமே.

3. இயேசு என் இன்பக் கோட்டை;
எனக்காய் மாண்டோரை
சார்ந்தென்றும் நிற்பேன், நீரே
நித்திய கன்மலை.
காத்திருப்பேன் அமர்ந்து
ராக்காலம் நீங்கிட,
பேரின்ப கரை சேர
மா ஜோதி தோன்றிட.

Yesuvin Kaikal Kaakka Lyrics in English

1. Yesuvin kaikal kaakka, maarpinil saaruvaen; paeranpin nilal soola amarnthu sukippaen. Palinguk kadal meethum maatchi nakarnintum thootharin inpa geetham poorippunndaakkividum. 2. Yesuvin kaikal kaakka, paallokin kavalai sothanai paavak kaedum thaakkaathu ullaththai; kashdam thukkam kannnneerum kaannaamal neengumae; vathaikkum thunpam Nnovum viraivil theerumae. 3. Yesu en inpak kottaை; enakkaay maanntoorai saarnthentum nirpaen, neerae niththiya kanmalai. Kaaththiruppaen amarnthu raakkaalam neengida, paerinpa karai sera maa jothi thontida.

PowerPoint Presentation Slides for the song Yesuvin Kaikal Kaakka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Kaikal Kaakka – இயேசுவின் கைகள் காக்க PPT
Yesuvin Kaikal Kaakka PPT

இயேசுவின் கைகள் காக்க அமர்ந்து மார்பினில் சாருவேன் பேரன்பின் நிழல் சூழ சுகிப்பேன் பளிங்குக் கடல் மீதும் மாட்சி நகர்நின்றும் தூதரின் இன்ப கீதம் தமிழ்