சீரேசு பாலன் ஜெயமனு வேலன்
சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமே
பாராளும் வேந்தன் பகரொண்ணா மைந்தன்,
தாராள மாகத் தாமே மனுவான — சீரேசு
1. எண்ணரும் பெருமான் ஏழைச் சாயலாக
மண்ணி லேகின மாட்சிமை யாலே,
விண்ணவர்கள் போற்ற, வெற்றிக்கவி சாற்ற
வண்ணம் பாடி நாம் மகிழ்ந்திட வேண்டாமோ? — சீரேசு
2. உன்னத பரனுக் கொப்பில்லா மகிமை
இந்நிலத்தினில் எழில்சமா தானம்,
மன்னுயிர்கள் மீது மாபிரியம் ஓங்க
தன்னுயிர் தந்த தயவை என்ன சொல்வோம்? — சீரேசு
3. பாவப் பிணியாலே பாதகரைப் போலே
சாபத்தை நம்மேல் நாம் தேடினோமே,
கோபத்தை ஒழித்தே குவலயத்தை மீட்க
தீபமாய் வந்த தேவமைந்தனான — சீரேசு
4. நித்தனே, என் பாவம் எத்தனையானாலும்
சித்தம் உருகிச் சீர்கூற வேணும்,
அத்தனே, உன் பாதம் அண்டினேன் இப்போதும்;
பத்தியாய் உன்னைப் பகருவேன் எப்போதும் — சீரேசு
Seeraesu Paalan Jeyamanu Vaelan Lyrics in English
Seeraesu paalan jeyamanu vaelan
Seer naamaththaith thinamae pottaுvomae
Paaraalum vaenthan pakaronnnnaa mainthan,
Thaaraala maakath thaamae manuvaana — seeraesu
1. Ennnarum perumaan aelaich saayalaaka
Mannnni laekina maatchimai yaalae,
Vinnnavarkal potta, vettikkavi saatta
Vannnam paati naam makilnthida vaenndaamo? — seeraesu
2. Unnatha paranuk koppillaa makimai
Innilaththinil elilsamaa thaanam,
Mannuyirkal meethu maapiriyam onga
Thannuyir thantha thayavai enna solvom? — seeraesu
3. Paavap pinniyaalae paathakaraip polae
Saapaththai nammael naam thaetinomae,
Kopaththai oliththae kuvalayaththai meetka
Theepamaay vantha thaevamainthanaana — seeraesu
4. Niththanae, en paavam eththanaiyaanaalum
Siththam urukich seerkoora vaenum,
Aththanae, un paatham anntinaen ippothum;
Paththiyaay unnaip pakaruvaen eppothum — seeraesu
PowerPoint Presentation Slides for the song Seeraesu Paalan Jeyamanu Vaelan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Seeraesu Paalan Jeyamanu Vaelan – சீரேசு பாலன் ஜெயமனு வேலன் PPT
Seeraesu Paalan Jeyamanu Vaelan PPT

