காலையில் தேவனைத் தேடு – ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு
சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு,
சீரான நித்திய ஜீவனை நாடு — காலமே
மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனு
மைந்தனென நாமம் வைத்திருந்தாரே
உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு — காலமே
பாவச் சோதனைகளை வெல்லு – கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய் மனுவேலனைப் பணிய — காலமே
சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடை
செய்யா திருங்களென்றார் மனதார
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் — காலமே
வேலையுனக்குக் கைகூட – சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட
காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே
கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே — காலமே
Kaalamae Thaevanaith Thaedu Lyrics in English
Kaalaiyil thaevanaith thaedu – jeeva kaarunnyar paatham panninthu mantadu seelamudan patham paatik konndaadu, seeraana niththiya jeevanai naadu — kaalamae mannuyirkkaay mariththaarae – manu mainthanena naamam vaiththirunthaarae un siruttikarai nee uthayaththilennnu ullanganinthu thaniJebam pannnu — kaalamae paavach sothanaikalai vellu – ketta paarudal paeyudan porukku nillu jeeva kireedanj siraththilanniyach sinthanai sey manuvaelanaip panniya — kaalamae siraுvarkal ennidanj serath -thatai seyyaa thirungalentar manathaara paraloka selva mavarkkup palikkum paakkiyamellaam paranthu jolikkum — kaalamae vaelaiyunakkuk kaikooda – sathya vaethan kirupai varaththai mantada kaalai thaeduvor enaik kanndataivaarae kannviliththu jepanj seyyumentarae — kaalamae
PowerPoint Presentation Slides for the song Kaalamae Thaevanaith Thaedu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalamae Thaevanaith Thaedu – காலையில் தேவனைத் தேடு ஜீவ PPT
Kaalamae Thaevanaith Thaedu PPT

