யோசுவா 7:6
அப்பொழுது யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலமட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின்மேல் புளுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது யோசுவா தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பர்களும் மாலைநேரம்வரைக்கும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்.
Tamil Easy Reading Version
யோசுவா இதைக் கேட்டபோது, துயரமுற்றுத் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக விழுந்து வணங்கினான். மாலைவரைக்கும் அங்கேயே இருந்தான். இஸ்ரவேலரின் தலைவர்களும் அவ்வாறே செய்தனர். அவர்கள் தங்கள் துயரத்தை வெளிப்படுத்துவதற்கு சாம்பலைத் தலையில் தூவிக்கொண்டனர்.
Thiru Viviliam
யோசுவா தம் ஆடைகளைக் கிழித்துக்கொள்ள, அவரும் அவருடன் இஸ்ரயேலின் முதியோரும் ஆண்டவரின் பேழைக்குமுன் மாலைவரை தரையில் முகம்குப்புற விழுந்து கிடந்தனர். தம் தலைமீது புழுதியைப் போட்டுக் கொண்டனர்.
King James Version (KJV)
And Joshua rent his clothes, and fell to the earth upon his face before the ark of the LORD until the eventide, he and the elders of Israel, and put dust upon their heads.
American Standard Version (ASV)
And Joshua rent his clothes, and fell to the earth upon his face before the ark of Jehovah until the evening, he and the elders of Israel; and they put dust upon their heads.
Bible in Basic English (BBE)
Then Joshua, in great grief, went down on the earth before the ark of the Lord till the evening, and all the chiefs of Israel with him, and they put dust on their heads.
Darby English Bible (DBY)
And Joshua rent his clothes, and fell to the earth upon his face before the ark of Jehovah until the evening, he and the elders of Israel, and threw dust upon their heads.
Webster’s Bible (WBT)
And Joshua rent his clothes, and fell to the earth upon his face before the ark of the LORD until the evening, he and the elders of Israel, and put dust upon their heads.
World English Bible (WEB)
Joshua tore his clothes, and fell to the earth on his face before the ark of Yahweh until the evening, he and the elders of Israel; and they put dust on their heads.
Young’s Literal Translation (YLT)
And Joshua rendeth his garments, and falleth on his face to the earth before the ark of Jehovah till the evening, he and the elders of Israel, and they cause dust to go up on their head.
யோசுவா Joshua 7:6
அப்பொழுது யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலமட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின்மேல் புளுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்.
And Joshua rent his clothes, and fell to the earth upon his face before the ark of the LORD until the eventide, he and the elders of Israel, and put dust upon their heads.
| וַיִּקְרַ֨ע | wayyiqraʿ | va-yeek-RA | |
| יְהוֹשֻׁ֜עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah | |
| שִׂמְלֹתָ֗יו | śimlōtāyw | seem-loh-TAV | |
| וַיִּפֹּל֩ | wayyippōl | va-yee-POLE | |
| עַל | ʿal | al | |
| פָּנָ֨יו | pānāyw | pa-NAV | |
| אַ֜רְצָה | ʾarṣâ | AR-tsa | |
| לִפְנֵ֨י | lipnê | leef-NAY | |
| אֲר֤וֹן | ʾărôn | uh-RONE | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| עַד | ʿad | ad | |
| הָעֶ֔רֶב | hāʿereb | ha-EH-rev | |
| ה֖וּא | hûʾ | hoo | |
| וְזִקְנֵ֣י | wĕziqnê | veh-zeek-NAY | |
| יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| וַיַּֽעֲל֥וּ | wayyaʿălû | va-ya-uh-LOO | |
| עָפָ֖ר | ʿāpār | ah-FAHR | |
| עַל | ʿal | al | |
| רֹאשָֽׁם׃ | rōʾšām | roh-SHAHM |
Cross Reference
ஆதியாகமம் 37:29
பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
2 சாமுவேல் 13:31
அப்பொழுது ராஜா எழுந்திருந்து, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தரையிலே விழுந்துகிடந்தான்; அவன் ஊழியக்காரர் எல்லாரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு நின்றார்கள்.
எண்ணாகமம் 14:6
தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
ஆதியாகமம் 37:34
தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.
வெளிப்படுத்தின விசேஷம் 18:19
தங்கள் தலைகள்மேல் புழுதியைப்போட்டுக்கொண்டு: ஐயையோ, மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையில் இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:14
அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, பட்டணத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்
புலம்பல் 2:10
சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மெளனமாய் இருக்கிறார்கள்; தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; இரட்டு உடுத்தியிருக்கிறார்கள்; எருசலேமின் கன்னியர்கள் தலைகவிழ்ந்து தரையை நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
யோபு 2:12
அவர்கள் தூரத்தில் வருகையில் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, அவனை உருத்தெரியாமல், சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் சால்வையைக் கிழித்து, வானத்தைப் பார்த்து: தங்கள் தலைகள்மேல் புழுதியைத் தூற்றிக்கொண்டு,
யோபு 1:20
அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து:
எஸ்தர் 4:1
நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல்போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா சத்தத்துடனே அலறிக்கொண்டு,
எஸ்றா 9:3
இந்த வர்த்தமானத்தை நான் கேட்டபொழுது, என் வஸ்திரத்தையும் என் சால்வையையும் நான் கிழித்து, என் தலையிலும் என் தாடியிலுமுள்ள மயிரைப் பிடுங்கித் திகைத்தவனாய் உட்கார்ந்திருந்தேன்.
2 சாமுவேல் 12:16
அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காக தேவனிடத்தில் பிரார்த்தனைபண்ணி, உபவாசித்து, உள்ளேபோய், இராமுழுதும் தரையிலே கிடந்தான்.
2 சாமுவேல் 1:12
சவுலும் அவன் குமாரனகிய யோனத்தானும் கர்த்தருடைய ஜனங்களும், இஸ்ரவேல் குடும்பத்தாரும், பட்டயத்தாலே விழுந்தபடியினால் புலம்பி அழுது சாயங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள்.
1 சாமுவேல் 4:12
பென்யமீன் கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடி, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் தலையின் மேல் புழுதியை வாரிப் போட்டுக்கொண்டு, அன்றையதினமே சீலோவுக்கு வந்தான்.
நியாயாதிபதிகள் 21:2
ஆகையால் ஜனங்கள் தேவனுடைய வீட்டிற்குப் போய், அங்கே தேவசந்நிதியில் சாயங்காலமட்டும் இருந்து, சத்தமிட்டு, மிகவும் அழுது;
நியாயாதிபதிகள் 20:26
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனங்களும் புறப்பட்டு, தேவனுடைய வீட்டிற்குப்போய், அங்கே கர்த்தருடைய சந்நிதியில் அழுது, தரித்திருந்து, அன்று சாயங்காலமட்டும் உபவாசித்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டு,
நியாயாதிபதிகள் 20:23
அவர்கள் போய், கர்த்தருடைய சந்நிதியில் சாயங்காலமட்டும் அழுது: எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே திரும்பவும் யுத்தம் கலக்கப்போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்; அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள் என்றார்.
எண்ணாகமம் 16:45
இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிஷத்தில் அவர்களை அதமாக்குவேன் என்றார்; அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்.
எண்ணாகமம் 16:22
அப்பொழுது அவர்கள் முகங்குப்புறவிழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபங்கொள்வீரோ என்றார்கள்.
Tags அப்பொழுது யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலமட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து தங்கள் தலைகளின்மேல் புளுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்
Joshua 7:6 in Tamil Concordance Joshua 7:6 in Tamil Interlinear Joshua 7:6 in Tamil Image