Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 4:30 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 4 1 Kings 4:30

1 இராஜாக்கள் 4:30
சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.

Tamil Indian Revised Version
சகல கிழக்குப்பகுதி மக்களின் ஞானத்தையும் எகிப்தியர்களின் சகல ஞானத்தையும்விட சாலொமோனின் ஞானம் சிறந்ததாக இருந்தது.

Tamil Easy Reading Version
கிழக்கே உள்ள அறிஞர்களின் ஞானத்தைவிட சாலொமோனின் ஞானம் மிகச்சிறந்ததாக இருந்தது. எகிப்திலுள்ள அனைவரின் ஞானத்தை விடவும் சிறந்த ஞானமாக இருந்தது.

Thiru Viviliam
கீழை நாட்டினர் அனைவரின் ஞானத்தையும், எகிப்தியரின் எல்லாவகை ஞானத்தையும்விடச் சாலமோனின் ஞானம் சிறந்ததாய் விளங்கிற்று.

1 Kings 4:291 Kings 41 Kings 4:31

King James Version (KJV)
And Solomon’s wisdom excelled the wisdom of all the children of the east country, and all the wisdom of Egypt.

American Standard Version (ASV)
And Solomon’s wisdom excelled the wisdom of all the children of the east, and all the wisdom of Egypt.

Bible in Basic English (BBE)
And Solomon’s wisdom was greater than the wisdom of all the people of the East and all the wisdom of Egypt.

Darby English Bible (DBY)
And Solomon’s wisdom excelled the wisdom of all the sons of the east, and all the wisdom of Egypt.

Webster’s Bible (WBT)
And Solomon’s wisdom excelled the wisdom of all the children of the east country, and all the wisdom of Egypt.

World English Bible (WEB)
Solomon’s wisdom excelled the wisdom of all the children of the east, and all the wisdom of Egypt.

Young’s Literal Translation (YLT)
and the wisdom of Solomon is greater than the wisdom of any of the sons of the east, and than all the wisdom of Egypt;

1 இராஜாக்கள் 1 Kings 4:30
சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.
And Solomon's wisdom excelled the wisdom of all the children of the east country, and all the wisdom of Egypt.

וַתֵּ֙רֶב֙wattērebva-TAY-REV
חָכְמַ֣תḥokmathoke-MAHT
שְׁלֹמֹ֔הšĕlōmōsheh-loh-MOH
מֵֽחָכְמַ֖תmēḥokmatmay-hoke-MAHT
כָּלkālkahl
בְּנֵיbĕnêbeh-NAY
קֶ֑דֶםqedemKEH-dem
וּמִכֹּ֖לûmikkōloo-mee-KOLE
חָכְמַ֥תḥokmathoke-MAHT
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:22
மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.

ஆதியாகமம் 25:6
ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.

யோபு 1:3
அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரருமிருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.

ஏசாயா 19:11
சோவான்பட்டணத்தின் பிரபுக்களானவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமாயிற்று: நான் ஞானிகளின் புத்திரன், நான் பூர்வ ராஜாக்களின் குமாரன் என்று பார்வோனுடனே எப்படிச் சொல்லுகிறீர்கள்?

தானியேல் 1:20
ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான்.

தானியேல் 4:7
அப்பொழுது சாஸ்திரிகளும், ஜோசியரும், கல்தேயரும், குறிசொல்லுகிறவர்களும் என்னிடத்திலே வந்தார்கள்; சொப்பனத்தை நான் அவர்களுக்குச் சொன்னாலும் அதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கமாட்டாமற்போனார்கள்.

தானியேல் 5:11
உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான். அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது; உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேகமும் தேவர்களின் ஞானத்துக்கு ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது; ஆகையால் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவானவர் அவனைச் சாஸ்திரிகளுக்கும் ஜோசியருக்கும் கல்தேயருக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் அதிபதியாக வைத்தார்.

மத்தேயு 2:1
ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,

மத்தேயு 2:16
அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.


Tags சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது
1 Kings 4:30 in Tamil Concordance 1 Kings 4:30 in Tamil Interlinear 1 Kings 4:30 in Tamil Image