சங்கீதம் 20:7
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
Tamil Indian Revised Version
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பெயரைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
Tamil Easy Reading Version
சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர். மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர். ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம். அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம்.
Thiru Viviliam
⁽சிலர் தேர்ப்படையிலும்,␢ சிலர் குதிரைப் படையிலும்␢ பெருமை கொள்கின்றனர்;␢ நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின்␢ பெயரில் பெருமை கொள்கின்றோம்.⁾
King James Version (KJV)
Some trust in chariots, and some in horses: but we will remember the name of the LORD our God.
American Standard Version (ASV)
Some `trust’ in chariots, and some in horses; But we will make mention of the name of Jehovah our God.
Bible in Basic English (BBE)
Some put their faith in carriages and some in horses; but we will be strong in the name of the Lord our God.
Darby English Bible (DBY)
Some make mention of chariots, and some of horses, but we of the name of Jehovah our God.
Webster’s Bible (WBT)
Now I know that the LORD saveth his anointed; he will hear him from his holy heaven with the saving strength of his right hand.
World English Bible (WEB)
Some trust in chariots, and some in horses, But we trust the name of Yahweh our God.
Young’s Literal Translation (YLT)
Some of chariots, and some of horses, And we of the name of Jehovah our God Make mention.
சங்கீதம் Psalm 20:7
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
Some trust in chariots, and some in horses: but we will remember the name of the LORD our God.
| אֵ֣לֶּה | ʾēlle | A-leh | |
| בָ֭רֶכֶב | bārekeb | VA-reh-hev | |
| וְאֵ֣לֶּה | wĕʾēlle | veh-A-leh | |
| בַסּוּסִ֑ים | bassûsîm | va-soo-SEEM | |
| וַאֲנַ֓חְנוּ׀ | waʾănaḥnû | va-uh-NAHK-noo | |
| בְּשֵׁם | bĕšēm | beh-SHAME | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהֵ֣ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo | |
| נַזְכִּֽיר׃ | nazkîr | nahz-KEER |
Cross Reference
2 நாளாகமம் 32:8
அவனோடிருக்கிறது மாம்சபுயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.
ஏசாயா 31:1
சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!
எரேமியா 17:5
மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நீதிமொழிகள் 21:31
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
சங்கீதம் 33:16
எந்த ராஜாவும் தன் சேனையின்மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான்.
ஏசாயா 30:16
அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த்துரத்துவார்கள்.
சங்கீதம் 45:17
உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.
2 நாளாகமம் 20:12
எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்.
2 நாளாகமம் 14:11
ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.
2 நாளாகமம் 13:16
இஸ்ரவேல் புத்திரர் யூதாவுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தேவன் அவர் களை இவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.
2 நாளாகமம் 13:10
எங்களுக்கோ கர்த்தரே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; கர்த்தருக்கு ஊழியஞ்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் குமாரரும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே.
2 சாமுவேல் 8:4
அவனுக்கு இருந்த இராணுவத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரைவீரரையும், பதினாயிரம் காலாட்களையும் பிடித்து இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.
1 சாமுவேல் 13:5
பெலிஸ்தர் இஸ்ரவேலோடு யுத்தம் பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள்.
2 சாமுவேல் 10:18
சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் எழுநூறு இரதவீரரையும் நாற்பதினாயிரம் குதிரைவீரரையும் கொன்று, அவர்களுடைய படைத்தலைவனாகிய சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான்.
Tags சிலர் இரதங்களைக்குறித்தும் சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்
Psalm 20:7 in Tamil Concordance Psalm 20:7 in Tamil Interlinear Psalm 20:7 in Tamil Image