Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 25:21 in Tamil

Home Bible Psalm Psalm 25 Psalm 25:21

சங்கீதம் 25:21
உத்தமமும் நேர்மையும் என்னைக்காக்கக்கடவது; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.

Tamil Indian Revised Version
உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.

Tamil Easy Reading Version
தேவனே, நீர் உண்மையாகவே நல்லவர். நான் உம்மை நம்புவதால் என்னைப் பாதுகாத்தருளும்.

Thiru Viviliam
⁽வாய்மையும் நேர்மையும்␢ எனக்கு அரணாய் இருக்கட்டும்;␢ ஏனெனில், நான் உம்மையே␢ நம்பியிருக்கின்றேன்.⁾

Psalm 25:20Psalm 25Psalm 25:22

King James Version (KJV)
Let integrity and uprightness preserve me; for I wait on thee.

American Standard Version (ASV)
Let integrity and uprightness preserve me, For I wait for thee.

Bible in Basic English (BBE)
For my clean and upright ways keep me safe, because my hope is in you.

Darby English Bible (DBY)
Let integrity and uprightness preserve me; for I wait on thee.

Webster’s Bible (WBT)
Let integrity and uprightness preserve me; for I wait on thee.

World English Bible (WEB)
Let integrity and uprightness preserve me, For I wait for you.

Young’s Literal Translation (YLT)
Integrity and uprightness do keep me, For I have waited `on’ Thee.

சங்கீதம் Psalm 25:21
உத்தமமும் நேர்மையும் என்னைக்காக்கக்கடவது; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.
Let integrity and uprightness preserve me; for I wait on thee.

תֹּםtōmtome
וָיֹ֥שֶׁרwāyōšerva-YOH-sher
יִצְּר֑וּנִיyiṣṣĕrûnîyee-tseh-ROO-nee
כִּ֝֗יkee
קִוִּיתִֽיךָ׃qiwwîtîkākee-wee-TEE-ha

Cross Reference

சங்கீதம் 41:12
நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.

நீதிமொழிகள் 20:7
நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப் பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:10
அதற்குப் பவுல்: நான் இராயருடைய நியாயாசனத்துக்கு முன்பாக நிற்கிறேன்; அதற்கு முன்பாக நான் நியாயம் விசாரிக்கப்படவேண்டியது; யூதருக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாய் அறிந்திருக்கிறீர்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:16
இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.

தானியேல் 6:22
சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.

நீதிமொழிகள் 11:3
செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.

சங்கீதம் 26:11
நானோ என் உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும்.

சங்கீதம் 26:1
கர்த்தாவே, என்னை நியாயம்விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை, நம்பியிருக்கிறேன். ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.

சங்கீதம் 18:20
கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.

சங்கீதம் 7:8
கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ்செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.

1 சாமுவேல் 26:23
கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப்பலன் அளிப்பாராக; இன்று கர்த்தர் உம்மை என்கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம்பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன்.

1 சாமுவேல் 24:11
என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.


Tags உத்தமமும் நேர்மையும் என்னைக்காக்கக்கடவது நான் உமக்குக் காத்திருக்கிறேன்
Psalm 25:21 in Tamil Concordance Psalm 25:21 in Tamil Interlinear Psalm 25:21 in Tamil Image