சங்கீதம் 50:21
இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவுகொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.
Tamil Indian Revised Version
இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாக இருந்தேன், உன்னைப்போல நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன்னுடைய கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.
Tamil Easy Reading Version
நீங்கள் இத்தீய செயல்களைச் செய்கிறீர்கள், நான் அமைதியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் எதையும் சொல்லாதிருக்கிறீர்கள், நானும் அமைதியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்கள். ஆனால் நான் அமைதியாக இரேன்! நீங்கள் அதைத் தெளிவாக உணரும்படி நான் செய்வேன். உங்கள் முகத்திற்கெதிராக உங்களை விமர்சிப்பேன்!
Thiru Viviliam
⁽இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும்,␢ நான் மௌனமாய் இருந்தேன்;␢ நானும் உங்களைப் போன்றவர் என␢ எண்ணிக் கொண்டீர்கள்;␢ ஆனால், இப்பொழுது␢ உங்களைக் கண்டிக்கின்றேன்;␢ உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன்␢ ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன்.⁾
King James Version (KJV)
These things hast thou done, and I kept silence; thou thoughtest that I was altogether such an one as thyself: but I will reprove thee, and set them in order before thine eyes.
American Standard Version (ASV)
These things hast thou done, and I kept silence; Thou thoughtest that I was altogether such a one as thyself: `But’ I will reprove thee, and set `them’ in order before thine eyes.
Bible in Basic English (BBE)
These things have you done, and I said nothing; it seemed to you that I was such a one as yourself; but I will make a protest against you, and put them in order before your eyes.
Darby English Bible (DBY)
These [things] hast thou done, and I kept silence; thou thoughtest that I was altogether as thyself: [but] I will reprove thee, and set [them] in order before thine eyes.
Webster’s Bible (WBT)
These things hast thou done, and I kept silence; thou thoughtest that I was altogether such an one as thyself: but I will reprove thee, and set them in order before thine eyes.
World English Bible (WEB)
You have done these things, and I kept silent. You thought that the “I AM” was just like you. I will rebuke you, and accuse you in front of your eyes.
Young’s Literal Translation (YLT)
These thou didst, and I kept silent, Thou hast thought that I am like thee, I reprove thee, and set in array before thine eyes.
சங்கீதம் Psalm 50:21
இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவுகொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.
These things hast thou done, and I kept silence; thou thoughtest that I was altogether such an one as thyself: but I will reprove thee, and set them in order before thine eyes.
| אֵ֤לֶּה | ʾēlle | A-leh | |
| עָשִׂ֨יתָ׀ | ʿāśîtā | ah-SEE-ta | |
| וְֽהֶחֱרַ֗שְׁתִּי | wĕheḥĕraštî | veh-heh-hay-RAHSH-tee | |
| דִּמִּ֗יתָ | dimmîtā | dee-MEE-ta | |
| הֱֽיוֹת | hĕyôt | HAY-yote | |
| אֶֽהְיֶ֥ה | ʾehĕye | eh-heh-YEH | |
| כָמ֑וֹךָ | kāmôkā | ha-MOH-ha | |
| אוֹכִיחֲךָ֖ | ʾôkîḥăkā | oh-hee-huh-HA | |
| וְאֶֽעֶרְכָ֣ה | wĕʾeʿerkâ | veh-eh-er-HA | |
| לְעֵינֶֽיךָ׃ | lĕʿênêkā | leh-ay-NAY-ha |
Cross Reference
ஏசாயா 57:11
நீ யாருக்கு அஞ்சிப் பயப்படுகிறாய், நீ பொய்சொல்லுகிறாயே; நீ என்னை நினையாமலும், உன் மனதிலே வைக்காமலும் போகிறாய்; நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் அல்லவா? ஆகையால் எனக்குப் பயப்படாதிருக்கிறாய்.
சங்கீதம் 90:8
எங்கள் அக்கிரமங்களை உமக்குமுன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.
ரோமர் 2:4
அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?
பிரசங்கி 8:11
துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.
நீதிமொழிகள் 29:1
அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
1 கொரிந்தியர் 4:5
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:19
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
2 பேதுரு 3:9
தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
ஆமோஸ் 8:7
அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார்.
ஏசாயா 42:14
நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.
பிரசங்கி 12:14
ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
சங்கீதம் 94:7
கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.
சங்கீதம் 50:3
நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார், அவருக்கு முன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும்.
யாத்திராகமம் 3:14
அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
எண்ணாகமம் 23:19
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?
சங்கீதம் 73:11
தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள்.
சங்கீதம் 109:1
நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும்.
ஏசாயா 40:15
இதோ, ஜாதிகள் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலவும், தராசிலே படியும் தூசிபோலவும், எண்ணப்படுகிறார்கள்; இதோ, தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார்.
ஏசாயா 26:10
துன்மார்க்கனுக்குத் தயை செய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.
சங்கீதம் 50:8
உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
Tags இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன் உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவுகொண்டாய் ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்
Psalm 50:21 in Tamil Concordance Psalm 50:21 in Tamil Interlinear Psalm 50:21 in Tamil Image