ஆமோஸ் 1:13
கர்த்தர் சொல்லுகிறது என்னவன்றால்: அம்மோன் புத்திரரின் மூன்று பாதகங்களினிமித்தமும் நாலு பாதகங்களினிமித்தமும் நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும்படிக்குக் கீலேயாத் தேசத்தின் கர்ப்பஸ்திரீகளைக் கீறிப்போட்டார்களே.
Tamil Indian Revised Version
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அம்மோன் மக்களின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்களுடைய எல்லைகளை விரிவாக்க கீலேயாத் தேசத்தின் கர்ப்பவதிகளைக் கீறிப்போட்டார்களே.
Tamil Easy Reading Version
கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக அம்மோன் ஜனங்களை அவர்கள் செய்த பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கீலேயாத் நாட்டில் கர்ப்பிணிப் பெண்களைக் கொன்றார்கள். அம்மோனியர்கள் இதனைச் செய்து தங்கள் நாட்டு எல்லைகளை விரித்தார்கள்.
Thiru Viviliam
⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “அம்மோன் மக்கள்␢ எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக␢ நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை␢ மாற்றவே மாட்டேன்;␢ ஏனெனில், அவர்கள்␢ தங்கள் நாட்டு எல்லைகளை␢ விரிவுபடுத்துவதற்காகக்␢ கிலயாதின் கர்ப்பவதிகள் வயிற்றைப்␢ பீறிக் கிழித்தார்கள்.⁾
Title
அம்மோனியர்களுக்கான தண்டனை
Other Title
அம்மோனியர் நாடு
King James Version (KJV)
Thus saith the LORD; For three transgressions of the children of Ammon, and for four, I will not turn away the punishment thereof; because they have ripped up the women with child of Gilead, that they might enlarge their border:
American Standard Version (ASV)
Thus saith Jehovah: For three transgressions of the children of Ammon, yea, for four, I will not turn away the punishment thereof; because they have ripped up the women with child of Gilead, that they may enlarge their border.
Bible in Basic English (BBE)
These are the words of the Lord: For three crimes of the children of Ammon, and for four, I will not let its fate be changed; because in Gilead they had women with child cut open, so that they might make wider the limits of their land.
Darby English Bible (DBY)
Thus saith Jehovah: For three transgressions of the children of Ammon, and for four, I will not revoke its sentence; because they ripped up the women with child of Gilead, that they might enlarge their border.
World English Bible (WEB)
Thus says Yahweh: “For three transgressions of the children of Ammon, yes, for four, I will not turn away its punishment; Because they have ripped open the pregnant women of Gilead, That they may enlarge their border.
Young’s Literal Translation (YLT)
Thus said Jehovah: For three transgressions of the sons of Ammon, And for four, I do not reverse it, Because of their ripping up the pregnant ones of Gilead, To enlarge their border,
ஆமோஸ் Amos 1:13
கர்த்தர் சொல்லுகிறது என்னவன்றால்: அம்மோன் புத்திரரின் மூன்று பாதகங்களினிமித்தமும் நாலு பாதகங்களினிமித்தமும் நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும்படிக்குக் கீலேயாத் தேசத்தின் கர்ப்பஸ்திரீகளைக் கீறிப்போட்டார்களே.
Thus saith the LORD; For three transgressions of the children of Ammon, and for four, I will not turn away the punishment thereof; because they have ripped up the women with child of Gilead, that they might enlarge their border:
| כֹּ֚ה | kō | koh | |
| אָמַ֣ר | ʾāmar | ah-MAHR | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| עַל | ʿal | al | |
| שְׁלֹשָׁה֙ | šĕlōšāh | sheh-loh-SHA | |
| פִּשְׁעֵ֣י | pišʿê | peesh-A | |
| בְנֵֽי | bĕnê | veh-NAY | |
| עַמּ֔וֹן | ʿammôn | AH-mone | |
| וְעַל | wĕʿal | veh-AL | |
| אַרְבָּעָ֖ה | ʾarbāʿâ | ar-ba-AH | |
| לֹ֣א | lōʾ | loh | |
| אֲשִׁיבֶ֑נּוּ | ʾăšîbennû | uh-shee-VEH-noo | |
| עַל | ʿal | al | |
| בִּקְעָם֙ | biqʿām | beek-AM | |
| הָר֣וֹת | hārôt | ha-ROTE | |
| הַגִּלְעָ֔ד | haggilʿād | ha-ɡeel-AD | |
| לְמַ֖עַן | lĕmaʿan | leh-MA-an | |
| הַרְחִ֥יב | harḥîb | hahr-HEEV | |
| אֶת | ʾet | et | |
| גְּבוּלָֽם׃ | gĕbûlām | ɡeh-voo-LAHM |
Cross Reference
ஓசியா 13:16
சமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினபடியால், குற்றஞ் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய கர்ப்பவதிகள் கீறப்பட்டுப்போவார்கள்.
எசேக்கியேல் 25:2
மனுபுத்திரனே, நீ அம்மோன் புத்திரருக்கு எதிராக முகத்தைத்திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
எரேமியா 49:1
அம்மோன் புத்திரரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்குக் குமாரர் இல்லையோ? அவனுக்குச் சுதந்தரவாளி இல்லையோ? அவர்கள் ராஜா காத்தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அதின் ஜனம் இவன் பட்டணங்களில் குடியிருப்பானேன்?
ஏசாயா 5:8
தாங்கள்மாத்திரம் தேசத்தின்நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!
எசேக்கியேல் 35:10
இரண்டு ஜாதிகளும் இரண்டுதேசங்களும் கர்த்தர் வசமாயிருந்தும், அவைகள் என்னுடையவைகளாகும், நான் அவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுவேன் என்று நீ சொல்லுகிறபடியினால்,
செப்பனியா 2:8
மோவாப் செய்த நிந்தனையையும், அம்மோன் புத்திரர் என் ஜனத்தை நிந்தித்து, அவர்கள் எல்லையைக் கடந்துபெருமை பாராட்டிச் சொன்ன தூஷணங்களையும் கேட்டேன்.
ஆபகூக் 2:5
அவன் மதுபானத்தினால் அக்கிரமஞ்செய்து அகங்காரியாகி, வீட்டிலே தரியாமல் அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல், மரணத்துக்குச் சமானமாய்ச் சகல ஜாதிகளையும் தன் வசமாகச் சேர்த்து, சகல ஜனங்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும்,
ஆமோஸ் 1:3
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இருப்புக் கருவிகளினால் அடித்தார்களே.
எசேக்கியேல் 21:28
பின்னும் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: அம்மோன் புத்திரரையும் அவர்கள் சொல்லும் நிந்தனைகளையும் குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்,
சங்கீதம் 83:7
ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாய் ஒப்பந்தம்பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
நெகேமியா 4:7
எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறது என்றும் இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டுவருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியரும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலாகி,
நெகேமியா 2:19
ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களைப் பரியாசம்பண்ணி, எங்களை நிந்தித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ என்றார்கள்.
உபாகமம் 23:3
அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.
நியாயாதிபதிகள் 10:7
அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டு, அவர்களைப் பெலிஸ்தர் கையிலும், அம்மோன் புத்திரர் கையிலும் விற்றுப்போட்டார்.
நியாயாதிபதிகள் 11:15
யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர் மோவாபியரின் தேசத்தையாகிலும், அம்மோன் புத்திரரின் தேசத்தையாகிலும் கட்டிக்கொண்டதில்லையே.
1 சாமுவேல் 11:1
அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிக்கைபோட்டான்; அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.
2 சாமுவேல் 10:1
அதன்பின்பு அம்மோன் புத்திரரின் ராஜா மரித்துப்போனான்; அவன் குமாரனாகிய ஆனூன் அவன் பட்டத்திற்கு ராஜாவானான்.
2 இராஜாக்கள் 24:2
அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும், அவன் மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார்.
2 நாளாகமம் 20:1
இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள்.
2 நாளாகமம் 20:10
இப்போதும், இதோ, இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து வருகிறபோது, அம்மோன் புத்திரர், மோவாபியர், சேயீர் மலைத்தேசத்தாருடைய சீமைகள் வழியாய்ப் போக நீர் உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் அவர்களை விட்டுவிலகி, அவர்களை நாசப்படுத்தாதிருந்தார்கள்.
உபாகமம் 2:19
அம்மோன் புத்திரருக்கு எதிராகச் சேரப்போகிறாய்; நீ அவர்களை வருத்தப்படுத்தவும் அவர்களோடே போர் செய்யவும் வேண்டாம்; அம்மோன் புத்திரரின் தேசத்தில் ஒன்றும் உனக்குச் சுதந்தரமாகக் கொடேன்; அதை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.
Tags கர்த்தர் சொல்லுகிறது என்னவன்றால் அம்மோன் புத்திரரின் மூன்று பாதகங்களினிமித்தமும் நாலு பாதகங்களினிமித்தமும் நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன் அவர்கள் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும்படிக்குக் கீலேயாத் தேசத்தின் கர்ப்பஸ்திரீகளைக் கீறிப்போட்டார்களே
Amos 1:13 in Tamil Concordance Amos 1:13 in Tamil Interlinear Amos 1:13 in Tamil Image