அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்.
1. பண்புறு ஞானம்,- பரம நம்பிக்கை,
இன்ப விஸ்வாசம், – இவைகளிலெல்லாம்
2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்,
கலகல வென்னும் – கைம்மணியாமே
3. என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்,
அன்பில்லையானால் – அதிற்பயனில்லை
4. துணிவுட னுடலைச் – சுடக்கொடுத்தாலும்,
பணிய அன்பில்லால் – பயனதிலில்லை
5. சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்
போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள
6. புகழிறு மாப்பு, – பொழிவு பொறாமை,
பகைய நியாயப் – பாவமுஞ் செய்யா
7. சினமடையாது, – தீங்கு முன்னாது,
தினமழியாது, – தீமை செய்யாது
8. சகலமுந் தாங்கும், – சகலமும் நம்பும்,
மிகைபட வென்றும் – மேன்மை பெற்றோங்கும்
Anbae Pirathanam Lyrics in English
Anpae pirathaanam, – sakothara anpae pirathaanam. 1. Pannpuraு njaanam,- parama nampikkai, inpa visvaasam, – ivaikalilellaam 2. Palapala paashai – patiththarinthaalum, kalakala vennum – kaimmanniyaamae 3. En porul yaavum – eenthaliththaalum, anpillaiyaanaal – athirpayanillai 4. Thunnivuda nudalaich – sudakkoduththaalum, panniya anpillaal – payanathilillai 5. Saanthamum thayavum – sakala narkunamum pontha saththiyamum – poraுmaiyumulla 6. Pukaliraு maappu, – polivu poraamai, pakaiya niyaayap – paavamunj seyyaa 7. Sinamataiyaathu, – theengu munnaathu, thinamaliyaathu, – theemai seyyaathu 8. Sakalamun thaangum, – sakalamum nampum, mikaipada ventum – maenmai pettaோngum
PowerPoint Presentation Slides for the song Anbae Pirathanam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbae Pirathanam – அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் PPT
Anbae Pirathanam PPT

