Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Balan Koduppeer Nalla - பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர்

பல்லவி

பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர்
பண்பட்ட நிலம் போல் பலன் கொடுப்பீர்

அனுபல்லவி
வழியோரமா? நான் கற்பாறையா?
முள் புதரா? நான் நல்ல நிலமா? – ..பலன்

1. இறைவனின் வார்த்தை விதையாகும்
அறியா உள்ளம் வழியோரம்
பறவைகள் விரைந்தே தின்பது போல்
பகைவனாம் தீயோன் பறித்திடுவான் – ..பலன்

2. மண்ணிலா பாறை நிலமாகும்
மனதில் நிறையற்ற மனிதர்களே
வேரற்ற வாழ்க்கை வாழ்வதினால்
வெயிலில் வார்த்தை கருகி விடும் – ..பலன்

3. முட் செடி புதராம் மனுவுள்ளம்
முளைத்திடும் ஆசைகள் நெறிந்திடவே
இறைவனின் வார்த்தை வளரவில்லை
இறுகியே ஆசைகள் கொன்றதினால் – ..பலன்

4. இறைவனின் வார்த்தை உணர்ந்திடுவோர்
குறையில்லா பண்பட்ட நிலமாகும்
அறுபது முப்பது நூறு என்றே
அறுவடை எடுப்பார் தம் வாழ்வில் – ..பலன்

Balan Koduppeer Nalla Lyrics in English

Pallavi

Palan koduppeer nalla palan koduppeer
Pannpatta nilam pol palan koduppeer

Anupallavi
Valiyoramaa? Naan karpaaraiyaa?
Mul putharaa? Naan nalla nilamaa? – ..palan

1. Iraivanin vaarththai vithaiyaakum
Ariyaa ullam valiyoram
Paravaikal virainthae thinpathu pol
Pakaivanaam theeyon pariththiduvaan – ..palan

2. Mannnnilaa paarai nilamaakum
Manathil niraiyatta manitharkalae
Vaeratta vaalkkai vaalvathinaal
Veyilil vaarththai karuki vidum – ..palan

3. Mut seti putharaam manuvullam
Mulaiththidum aasaikal nerinthidavae
Iraivanin vaarththai valaravillai
Iraுkiyae aasaikal kontathinaal – ..palan

4. Iraivanin vaarththai unarnthiduvor
Kuraiyillaa pannpatta nilamaakum
Araுpathu muppathu nooraு ente
Araுvatai eduppaar tham vaalvil – ..palan

PowerPoint Presentation Slides for the song Balan Koduppeer Nalla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Balan Koduppeer Nalla – பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர் PPT
Balan Koduppeer Nalla PPT

பலன் வார்த்தை கொடுப்பீர் நல்ல இறைவனின் ஆசைகள் பல்லவி கொடுப்பீர்பண்பட்ட நிலம் அனுபல்லவிவழியோரமா கற்பாறையாமுள் புதரா நிலமா விதையாகும்அறியா உள்ளம் வழியோரம்பறவைகள் விரைந்தே தின்பது தமிழ்