பல்லவி
அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே
அனுபல்லவி
இதுகாறும் காத்த தந்தை நீரே;
இனிமேலும் காத்தருள் செய்வீரே,
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே! — அதிகாலை
சரணங்கள்
1. போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!
ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?
எனக்கான ஈசனே! வான ராசனே!
இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! — அதிகாலை
2. பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது
தப்பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,
விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? — அதிகாலை
3. நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே!
தீநாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
பரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே!
புகழார நாதனே! வேத போதனே!
பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! — அதிகாலை
Adhikaalaiyelumai Theduven Mulu Lyrics in English
Pallavi athikaalaiyilumaith thaeduvaen mulu manathaalae thaevaaseer vaatham pera naaduvaen jepa thapaththaalae anupallavi ithukaaraுm kaaththa thanthai neerae; inimaelum kaaththarul seyveerae, pathivaaka ummilae naan nilaikkavae, paththiramaay enai uththamanaakkidum , thaevae! — athikaalai saranangal 1. Ponaraamuluvathum paathukaaththarulina pothaa! Eppothum engaludaniruppathaay uraiththa nal naathaa! Eenappaavik kaethuthunnai lokilunndu porpaathaa? Enakkaana eesanae! Vaana raasanae! Intha naalilum oru panthamillaamal kaarum neethaa! — athikaalai 2. Palasothanaikalaal soolnthunaan kalangidumpothu thappaathu ninkirupai thaangida vaenum appothu, vilakaathu ensamookam enta vaakkil thavaraேthu? Visuvaasang konndu meyp paasamoonntida vikkinam yaavilum vetti kaanuvaen malaivaethu? — athikaalai 3. Nararyaavarkkumutta nannpanaay nadanthida vaiyae! Theenaavin paavamara nanmaikal molinthidach seyyae! Paraloka aaviyainal maari polenilae peyyae! Pukalaara naathanae! Vaetha pothanae! Pooranamaay unaip pottaுvaen, thinan thinam meyyae! — athikaalai
PowerPoint Presentation Slides for the song Adhikaalaiyelumai Theduven Mulu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adhikaalaiyelumai Theduven Mulu – அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே PPT
Adhikaalaiyelumai Theduven Mulu PPT

