1. கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே ஒருக்
காலும் தாழ்ச்சி யடையேன் இனிமேலே
2. புல்லுள்ள இடங்களிலவர் மேய்ப்பார் – நல்ல
புனல் தடங்களில் என்னைக் கொண்டு சேர்ப்பார்
3. ஆத்துமத் தேறுதல் அளித்தவர் பேர்ப்
பொருட்டாக நீதியிலென்னை நடத்துகிறார்
4. மரண இருள் பள்ளத்தில் நடந்தாலும் – அஞ்ச
மாட்டேன் நானுமதினால் ஒருக்காலும்
5. தேவரீர் என்னோடே நீர் இருப்பதாலும் – என்னைத்
தேற்றும் உமது தடியும் கோலும்
6. சத்துருக்களுக்கு முன் ஒரு பந்தி – நீர்
தக்கபடி எனக்குச் சரிப்படுத்தி
7. சிரசினில் எனக்கெண்ணெய் எடுத்து ஊற்றி – அபி
ஷேகம் செய்கிறீர் சகலமும் பூர்த்தி
8. ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையுடன் – கிருபை
சேர்ந்து தொடரும் என்னை செம்மையுடன்
9. நேச கர்த்தருடைய வீட்டிலே நான் – மேவி
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்
Karthar En Meipper Athinale Oru Lyrics in English
1. Karththar en maeyppar athinaalae oruk kaalum thaalchchi yataiyaen inimaelae 2. Pullulla idangalilavar maeyppaar – nalla punal thadangalil ennaik konndu serppaar 3. Aaththumath thaeraுthal aliththavar paerp poruttaka neethiyilennai nadaththukiraar 4. Marana irul pallaththil nadanthaalum – anja maattaேn naanumathinaal orukkaalum 5. Thaevareer ennotae neer iruppathaalum – ennaith thaettaுm umathu thatiyum kolum 6. Saththurukkalukku mun oru panthi – neer thakkapati enakkuch sarippaduththi 7. Sirasinil enakkennnney eduththu ootti – api shaekam seykireer sakalamum poorththi 8. Jeevanulla naalellaam nanmaiyudan – kirupai sernthu thodarum ennai semmaiyudan 9. Naesa karththarutaiya veettilae naan – maevi neetiththa naatkalaay nilaiththiruppaen
PowerPoint Presentation Slides for the song Karthar En Meipper Athinale Oru
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar En Meipper Athinale Oru – கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே ஒருக் PPT
Karthar En Meipper Athinale Oru PPT

