Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kurusinil Thongiye Kurudhiyum Vadiya - குருசினில் தொங்கியே குருதியும் வடிய

குருசினில் தொங்கியே குருதியும் வடிய

கொல்கதா மலைதனிலே – நம்

குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி,

கொள்ளாய் கண் கொண்டு

சரணங்கள்

1. சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே

சிலுவையில் சேர்த்தையோ! – தீயர்

திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,

சேனைத்திரள் சூழ — குருசினில்

2. பாதகர் நடுவில் பாவியினேசன்

பாதகன் போல் தொங்க – யூத

பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்

படுத்திய கொடுமைதனை — குருசினில்

3. சந்திர சூரிய சசல வான் சேனைகள்

சகியாமல், நாணுதையோ! – தேவ

சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்

துடிக்கா நெஞ்சுண்டோ? — குருசினில்

4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த

இறைவன் விலாவதிலே – அவர்

தீட்டிய திட்சைக் குருதியும் ஜலமும்

திறந்தூறோடுது பார் — குருசினில்

5. எருசலேம் மாதே, மறுகி நீயழுது

ஏங்கிப் புலம்பலையோ? – நின்

எருசலையதிபன் இள மணவாளன்

எடுத்த கோல மிதோ? — குருசினில்

Kurusinil Thongiye Kurudhiyum Vadiya Lyrics in English

Kurusinil thongiyae kuruthiyum vatiya

Kolkathaa malaithanilae – nam

Kuruvaesu suvaami kodun thuyar paavi,

Kollaay kann konndu

Saranangal

1. Sirasinil munnmuti uraுththida, arainthae

Siluvaiyil serththaiyo! – theeyar

Thirukkarang kaalkalil aannikalatiththaar,

Senaiththiral soola — kurusinil

2. Paathakar naduvil paaviyinaesan

Paathakan pol thonga – yootha

Paathakar parikaasangal pannnnip

Paduththiya kodumaithanai — kurusinil

3. Santhira sooriya sasala vaan senaikal

Sakiyaamal, naanuthaiyo! – thaeva

Sunthara maintha nuyir vidukaatchiyaal

Thutikkaa nenjunntoo? — kurusinil

4. Eettiyaal sevakan ettiyae kuththa

Iraivan vilaavathilae – avar

Theettiya thitchaைk kuruthiyum jalamum

Thiranthooroduthu paar — kurusinil

5. Jerusalem maathae, maraுki neeyaluthu

Aengip pulampalaiyo? – nin

Erusalaiyathipan ila manavaalan

Eduththa kola mitho? — kurusinil

PowerPoint Presentation Slides for the song Kurusinil Thongiye Kurudhiyum Vadiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kurusinil Thongiye Kurudhiyum Vadiya – குருசினில் தொங்கியே குருதியும் வடிய PPT
Kurusinil Thongiye Kurudhiyum Vadiya PPT

குருசினில் குருதியும் பாதகர் தொங்கியே வடிய கொல்கதா மலைதனிலே நம் குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி கொள்ளாய் கண் சரணங்கள் சிரசினில் முண்முடி உறுத்திட தமிழ்