Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paava Sanjalathai Neekka - பாவ சஞ்சலத்தை நீக்க

1. பாவ சஞ்சலத்தை நீக்க
பிராண நண்பர்தான் உண்டே!
பாவ பாரம் தீர்ந்து போக
மீட்பர் பாதம் தஞ்சமே;
சால துக்க துன்பத்தாலே
நெஞ்சம் நொந்து சோருங்கால்,
துன்பம் இன்பமாக மாறும்
ஊக்கமான ஜெபத்தால்.

2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும்
இயேசுவண்டை சேருவோம்;
மோச நாசம் நேரிட்டாலும்
ஜெப தூபம் காட்டுவோம்;
நீக்குவாரே நெஞ்சின் நோவை
பெலவீனம் தாங்குவார்;
நீக்குவாரே மனச் சோர்பை,
தீய குணம் மாற்றுவார்.

3. பெலவீனமான போதும்
கிருபாசனமுண்டே;
பந்து ஜனம் சாகும் போதும்
புகலிடம் இதுவே;
ஒப்பில்லாத பிராண நேசா!
உம்மை நம்பி நேசிப்போம்;
அளவற்ற அருள் நாதா!
உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.

Paava Sanjalathai Neekka Lyrics in English

1. Paava sanjalaththai neekka piraana nannparthaan unntae! Paava paaram theernthu poka meetpar paatham thanjamae; saala thukka thunpaththaalae nenjam nonthu sorungaal, thunpam inpamaaka maaraுm ookkamaana jepaththaal. 2. Kashda nashdam unndaanaalum Yesuvanntai seruvom; mosa naasam naerittalum jepa thoopam kaattuvom; neekkuvaarae nenjin Nnovai pelaveenam thaanguvaar; neekkuvaarae manach sorpai, theeya kunam maattaுvaar. 3. Pelaveenamaana pothum kirupaasanamunntae; panthu janam saakum pothum pukalidam ithuvae; oppillaatha piraana naesaa! Ummai nampi naesippom; alavatta arul naathaa! Ummai Nnokkik kenjuvom.

PowerPoint Presentation Slides for the song Paava Sanjalathai Neekka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paava Sanjalathai Neekka – பாவ சஞ்சலத்தை நீக்க PPT
Paava Sanjalathai Neekka PPT

பாவ பிராண நீக்குவாரே போதும் உம்மை சஞ்சலத்தை நீக்க நண்பர்தான் உண்டே பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் தமிழ்