Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanam Boomiyo Paraaparan - வானம் பூமியோ பராபரன்

பல்லவி
வானம் பூமியோ? பராபரன்
மானிடன் ஆனாரோ? என்ன இது?

அனுபல்லவி

ஞானவான்களே, நிதானவான்களே,-என்ன இது?-வானம்

சரணங்கள்

1. பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்
பொறுமைக் கிருபாசனத்துரை,
பூபதி வந்ததே அதிசயம்!-ஆ! என்ன இது! – வானம்

2. சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,
நித்ய பிதாவினோர்‌ம
கத்துவக் குமாரனோ இவர்?-ஆ! என்ன இது? – வானம்

3. மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலே
கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,[1]
நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! – ஆ! என்ன இது? – வானம்

4. வேறே பேரல்ல, சுரர் விண்ணவர் ஆருமல்ல‌;
மாறில்லாத ஈறில்லாத‌
வல்லமைத் தேவனே புல்லில் கிடக்கிறார்! – ஆ! என்ன இது? – வானம்

5. சீயோனின் மாதே, இனி க்ஷெணந்தரியாதே,
மாயமென்ன? உனக்குச் சொல்லவோ?
வந்தவர் மணவாளனல்லவோ?-ஆ! என்ன இது? – வானம்

Vaanam Boomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன் Lyrics in English

Pallavi
Vaanam poomiyo? Paraaparan
Maanidan aanaaro? Enna ithu?

Anupallavi

Njaanavaankalae, nithaanavaankalae,-enna ithu?-vaanam

Saranangal

1. Ponnakarath thaalum, unnathamae neelum
Poraுmaik kirupaasanaththurai,
Poopathi vanthathae athisayam!-aa! Enna ithu! – vaanam

2. Sathya saruvaesan, thuthya kirupaivaasan,
Nithya pithaavinor‌ma
Kaththuvak kumaarano ivar?-aa! Enna ithu? – vaanam

3. Manthaik kaattilae maattukkottililae
Kanthaith thunniyaip pothintha sootchi,[1]
Ninthaip paavikal sonthak kannkaatchi! – aa! Enna ithu? – vaanam

4. Vaeraே paeralla, surar vinnnavar aarumalla‌;
Maarillaatha eerillaatha‌
Vallamaith thaevanae pullil kidakkiraar! – aa! Enna ithu? – vaanam

5. Seeyonin maathae, ini kshenanthariyaathae,
Maayamenna? Unakkuch sollavo?
Vanthavar manavaalanallavo?-aa! Enna ithu? – vaanam

PowerPoint Presentation Slides for the song Vaanam Boomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanam Boomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன் PPT
Vaanam Boomiyo Paraaparan PPT

வானம் பல்லவி பூமியோ பராபரன் மானிடன் ஆனாரோ அனுபல்லவி ஞானவான்களே நிதானவான்களேஎன்ன இதுவானம் சரணங்கள் பொன்னகரத் தாளும் உன்னதமே நீளும் பொறுமைக் கிருபாசனத்துரை பூபதி தமிழ்