Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Poel Yarundu - உம்மைப்போல் யாருண்டு? எந்தன் இயேசுநாதா

உம்மைப்போல் யாருண்டு? எந்தன் இயேசுநாதா
இந்தப் பார்தலத்தில் உம்மைப்போல் யாருண்டு?
பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
தேவா தம் அன்பினால் மன்னித்தீர்

1. உலகம், மாமிசம், பிசாசின் பிடியில்
அடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன்
நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்
மனம்போல் நடந்தேன், ஏமாற்றம் அடைந்தேன்
என்னையா தேடினீர் ஐயா, இயேசு நாதா?
உம்மை மறந்த ஓர் துரோகி நான்
என்னையா தேடினீர் ஐயா, இயேசு நாதா?
அடிமை உமக்கே இனி நான்.

2. இன்றைக்கு நான் செய்யும் இந்த தீர்மானத்தை
என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும்
நொறுக்கும் உருக்கும் உடையும் வனையும்
உமக்கே உகந்த தூய சரீரமாய்
ஐம்பொறிகளையும் உமக்குள் அடக்கும்
இயேசுவே ஆவியால் நிரப்பும்
வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய்த் திகழ
அக்கினி என் உள்ளம் இறக்கும்

3. வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும்
சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்
மேசியா வருகை வரையில் பலரை
சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்
முழங்காலில் நிற்க, வேதத்தை அறிய
தினந்தோறும் தேவா உணர்த்தும்
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும்
என்றுமே வராமல் காத்திடும்

Ummai Poel Yarundu Lyrics in English

Ummaippol yaarunndu? Enthan Yesunaathaa inthap paarthalaththil ummaippol yaarunndu? Paavappitiyinil sikki naan ulanten thaevaa tham anpinaal manniththeer 1. Ulakam, maamisam, pisaasin pitiyil atimaiyaakavae paavi naan jeeviththaen nimmathi ilanthaen thooymaiyai maranthaen manampol nadanthaen, aemaattam atainthaen ennaiyaa thaetineer aiyaa, Yesu naathaa? Ummai marantha or thuroki naan ennaiyaa thaetineer aiyaa, Yesu naathaa? Atimai umakkae ini naan. 2. Intaikku naan seyyum intha theermaanaththai entaikkum kaaththida aaviyaal nirappum noraுkkum urukkum utaiyum vanaiyum umakkae ukantha thooya sareeramaay aimporikalaiyum umakkul adakkum Yesuvae aaviyaal nirappum vetti vaalkkaiyulla makanaayth thikala akkini en ullam irakkum 3. Veettilum oorilum sellumidamengum sothanai vanthitil karththaa neer kaaththidum maesiyaa varukai varaiyil palarai siluvaik karukil alaikka aevidum mulangaalil nirka, vaethaththai ariya thinanthoraுm thaevaa unarththum umakkum enakkum itaiyil ethuvum entumae varaamal kaaththidum

PowerPoint Presentation Slides for the song Ummai Poel Yarundu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Poel Yarundu – உம்மைப்போல் யாருண்டு? எந்தன் இயேசுநாதா PPT
Ummai Poel Yarundu PPT

உம்மைப்போல் யாருண்டு தேவா என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா உமக்கே ஆவியால் நிரப்பும் காத்திடும் எந்தன் இயேசுநாதா பார்தலத்தில் பாவப்பிடியினில் சிக்கி உழன்றேன் தம் தமிழ்