Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enathu Karththarin Raajareeka - கர்த்தரின் நாள்

கர்த்தரின் நாள்

எனது கர்த்தரின் ராஜரீக
எப்போ வருகுமோ?
ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
எப்போ பெருகுமோ?
 
மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் என்றாரே
வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே
 
1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே
ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே
ஜீவனுள்ளோரும் அவருடன் மறு ரூபமாகவே
ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்துபோகவே
   
2. தூதர் எக்காளத்தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே
சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே
பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே
பாவ மனுஷன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே
  
3. ஜாதிகட்குக் கொடியாய் ஈசாயின் வேரன் றேறுவார்
சகலரும் அவர் கொடியின் கீழ் வந்து பணிந்து சூழுவார்
நீதியாய்த் தானே மேசியா எங்கும் ஆளுகை செய்வார்
நித்தம் பிரபுக்களும் நியாயமாய்த் துரைத்தனம் செய்வார்
    
4. எருசலேமி லிருந்த ஜீவ நதிகள் ஓடுமே
ஏழைகள் மன மகிழ்ந்து கர்த்தரை ஏத்திப் பாடுமே
வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே
வானராச்சிய சேனைகள் யாவும் வந்து கூடுமே

5. சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே
சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்த பிடிக்குமே
நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே
நித்திய ஜீவனைப் பெற என்றன் மனம் துடிக்குமே

Enathu Karththarin Raajareeka Lyrics in English

Karththarin naal enathu karththarin raajareeka eppo varukumo? Aengum en kali neenga makilchchi eppo perukumo?   manithasuthanin ataiyaalam vinnnnil kaanum entarae vallamaiyodu makimaiyaayth thonti varuvaen entarae   1. Thaeva thootharin kataisi ekkaalam thoni mulangavae jekaththil aesuvaip patti mariththor uyirththelumpavae jeevanullorum avarudan maraு roopamaakavae jekaththil paktharkal karththaridaththuk kelunthupokavae     2. Thoothar ekkaalaththoniyil ennidam serppaen entarae sothanai kaalanthanil thappavunnaik kaappaen entarae paathaka manujaathi vaethanai ataiyum entarae paava manushan thonti naasamaayp povaan entarae    3. Jaathikatkuk kotiyaay eesaayin vaeran raேraுvaar sakalarum avar kotiyin geel vanthu panninthu sooluvaar neethiyaayth thaanae maesiyaa engum aalukai seyvaar niththam pirapukkalum niyaayamaayth thuraiththanam seyvaar      4. Erusalaemi liruntha jeeva nathikal odumae aelaikal mana makilnthu karththarai aeththip paadumae varushamaayiram alavum poomiyil palankal needumae vaanaraachchiya senaikal yaavum vanthu koodumae 5. Sanjalangalum thavippukal yaavum otip pokumae santhoshaththodu makilchchiyum vanthu saarntha pitikkumae nenja makilnthu neethimaankalin vaay thuthikkumae niththiya jeevanaip pera entan manam thutikkumae

PowerPoint Presentation Slides for the song Enathu Karththarin Raajareeka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enathu Karththarin Raajareeka – கர்த்தரின் நாள் PPT
Enathu Karththarin Raajareeka PPT

கர்த்தரின் தோன்றி என்றாரே மகிழ்ந்து யாவும் நாள் எனது ராஜரீகஎப்போ வருகுமோஏங்கும் கலி நீங்க மகிழ்ச்சிஎப்போ பெருகுமோ மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் என்றாரேவல்லமையோடு மகிமையாய்த் தமிழ்