என் உள்ளங் கவரும்
பல்லவி
என் உள்ளங் கவரும்,-நீர் மரித்த
இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட.
அனுபல்லவி
என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு
இரத்தம், தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை. – என்
சரணங்கள்
1. உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன்,
உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன்,
எந்தையே, நானும்மைச் சேர்ந்தவனாயினும்,
இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட. – என்
2. சுத்தக் கிருபையின் வல்லமையால் என்னை
முத்திரியும் உமக்கூழியம் செய்திட,
அத்தனே, உம்மில் நல் நம்பிக்கையாய் உந்தன்
சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட. – என்
3. உந்தனடிதனில் உறைந்து தனித்து
ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம்;
என் தேவனே, அதி நேசமாய் உம்முடன்
இன்ப சம்பாஷணை செய்வதே ஆனந்தம். – என்
4. அம்பரா, மரண ஆழி தாண்டும் வரை
அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு;
என் பரனே, உந்தன் அன்பின் ஆழத்தை நான்
இம்மையில் கூடியமட்டும் அறிந்திட. – என்
En Ullam Kavarum – என் உள்ளங் கவரும் Lyrics in English
En ullang kavarum pallavi en ullang kavarum,-neer mariththa inpak kurusanntai innum nerungida. Anupallavi en paavam pokkavae eettiyaal kuththunndu iraththam, thannnneer valinthodum vilaavanntai. – en saranangal 1. Unthan makaa inpa saththam naan kaettavan, umathaachchariya anpai unarnthavan, enthaiyae, naanummaich sernthavanaayinum, innum nerungi naan ummanntai sernthida. – en 2. Suththak kirupaiyin vallamaiyaal ennai muththiriyum umakkooliyam seythida, aththanae, ummil nal nampikkaiyaay unthan siththamae en siththamaakap pilaiththida. – en 3. Unthanatithanil urainthu thaniththu or manni naeram kalippathae paakkiyam; en thaevanae, athi naesamaay ummudan inpa sampaashannai seyvathae aanantham. – en 4. Amparaa, marana aali thaanndum varai ariya mutiyaa anpin aalam unndu; en paranae, unthan anpin aalaththai naan immaiyil kootiyamattum arinthida. – en
PowerPoint Presentation Slides for the song En Ullam Kavarum – என் உள்ளங் கவரும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Ullam Kavarum – என் உள்ளங் கவரும் PPT
En Ullam Kavarum PPT

