Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyya Neerentru Anna Kaaibaavin - ஐயா நீரன்று அன்னா காய்பாவின்

1.ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்
நையவே பட்ட பாடு ஏசையாவே!
கைகள் கட்டினர்கொலோ? கால்கள் தள்ளாடினவோ?
கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே! – ஐயா

2.திரு முகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க‌
பெருந்தீயர் துன்புறுத்த ஏசையாவே!
பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க‌
அருமைப் பொருள் தான ஏசையாவே! – ஐயா

3.முள்ளின் முடியணிந்து வள்ளலே என் நிகழ‌
எள்ளளவும் பேசாத ஏசையாவே!
கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்
கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே! – ஐயா

4.கற்றூணில் சேர்த்திறுக்கிச் செற்றலர் தாம் முறுக்கிக்
கர்வங்கொண்டே ஏசிட ஏசையாவே!
சற்றுமிரக்கமில்லாச் சண்டாளன் ஓடி வந்த‌
சாடிக் கன்னத்தறைய ஏசையாவே! – ஐயா

5.பொன்னான மேனியதில் புழுதி மிகப் படிய
புண்ணியன் நீர் கலங்க, ஏசையாவே
அண்ணலே, அன்பருய்ய அவஸ்தைகளைச் சகித்தீர்
அடியேனைக் காத்தருளும் ஏசையாவே

Iyya Neerentru Anna Kaaibaavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின் Lyrics in English

1.aiyaa neerantu annaa kaaypaavin veettil
Naiyavae patta paadu aesaiyaavae!
Kaikal kattinarkolo? Kaalkal thallaatinavo?
Kayavarkal thooshiththaaro aesaiyaavae! – aiyaa

2.thiru mukam arul manga senguruthikal ponga‌
Peruntheeyar thunpuraுththa aesaiyaavae!
Poraுmai anpu thayaalam punithamaaka vilanga‌
Arumaip porul thaana aesaiyaavae! – aiyaa

3.mullin mutiyanninthu vallalae en nikala‌
Ellalavum paesaatha aesaiyaavae!
Kallan polae pitiththuk kasaiyaal atiththu mikak
Kanmikal seytha paavam aesaiyaavae! – aiyaa

4.kattaூnnil serththiraுkkich settalar thaam muraுkkik
Karvangaொnntae aesida aesaiyaavae!
Sattaுmirakkamillaach sanndaalan oti vantha‌
Saatik kannaththaraiya aesaiyaavae! – aiyaa

5.ponnaana maeniyathil puluthi mikap patiya
Punnnniyan neer kalanga, aesaiyaavae
Annnalae, anparuyya avasthaikalaich sakiththeer
Atiyaenaik kaaththarulum aesaiyaavae

PowerPoint Presentation Slides for the song Iyya Neerentru Anna Kaaibaavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyya Neerentru Anna Kaaibaavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின் PPT
Iyya Neerentru Anna Kaaibaavin PPT

ஏசையாவே ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில் நையவே பட்ட பாடு கைகள் கட்டினர்கொலோ கால்கள் தள்ளாடினவோ கயவர்கள் தூஷித்தாரோ திரு முகம் அருள் மங்க தமிழ்