எரேமியா 25:31
ஆரவாரம் பூமியின் கடையாந்தரமட்டும் போய் எட்டும்; ஜாதிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; மாம்சமான யாவரோடும் அவர் நியாயத்துக்குள் பிரவேசிப்பார்; துன்மார்க்கரைப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பார் என்று கர்த்தர் செޠβ்லுகிறார்.
Tamil Indian Revised Version
ஆரவாரம் பூமியின் கடைசிவரை போய் சேரும்; தேசங்களுடன் கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; மாம்சமான அனைவருடனும் அவர் நியாயத்திற்குள் நுழைவார்; துன்மார்க்கரைப் பட்டயத்திற்கு ஒப்புக்கொடுப்பார் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
பூமியிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் அச்சத்தம் பரவுகிறது. அனைத்து சத்தம் எதைக் குறித்துள்ளது? எல்லா நாடுகளில் உள்ள ஜனங்களையும் கர்த்தர் தண்டித்துக்கொண்டிருக்கிறார். கர்த்தர் ஜனங்களுக்கு எதிராக தம் வாதங்களைச் சொன்னார். அவர் ஜனங்களை நியாயந்தீர்த்தார். இப்பொழுது அவர் தீய ஜனங்களை பட்டயத்தால் கொன்றுக்கொண்டிருக்கிறார்’” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
Thiru Viviliam
⁽அவரது கர்ச்சனை␢ உலகின் எல்லைவரை எட்டும்;␢ ஏனெனில், ஆண்டவர்␢ மக்களினங்களுக்கு எதிராக␢ வழக்குத் தொடரப்போகிறார்;␢ அவர் எல்லா மனிதர்க்கும்␢ தீர்ப்பு வழங்கப்போகிறார்;␢ தீயோரை அவர்␢ வாளுக்கு இரையாக்குவார்,␢ என்கிறார் ஆண்டவர்.”⁾
King James Version (KJV)
A noise shall come even to the ends of the earth; for the LORD hath a controversy with the nations, he will plead with all flesh; he will give them that are wicked to the sword, saith the LORD.
American Standard Version (ASV)
A noise shall come even to the end of the earth; for Jehovah hath a controversy with the nations; he will enter into judgment with all flesh: as for the wicked, he will give them to the sword, saith Jehovah.
Bible in Basic English (BBE)
A noise will come, even to the end of the earth; for the Lord has a cause against the nations, he will give his decision against all flesh; as for the evil-doers, he will give them to the sword, says the Lord.
Darby English Bible (DBY)
The noise shall come to the end of the earth: for Jehovah hath a controversy with the nations, he entereth into judgment with all flesh; as for the wicked, he will give them up to the sword, saith Jehovah.
World English Bible (WEB)
A noise shall come even to the end of the earth; for Yahweh has a controversy with the nations; he will enter into judgment with all flesh: as for the wicked, he will give them to the sword, says Yahweh.
Young’s Literal Translation (YLT)
Wasting hath come unto the end of the earth, For a controversy hath Jehovah with nations, He hath executed judgment for all flesh, The wicked! He hath given them to the sword, An affirmation of Jehovah.
எரேமியா Jeremiah 25:31
ஆரவாரம் பூமியின் கடையாந்தரமட்டும் போய் எட்டும்; ஜாதிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; மாம்சமான யாவரோடும் அவர் நியாயத்துக்குள் பிரவேசிப்பார்; துன்மார்க்கரைப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பார் என்று கர்த்தர் செޠβ்லுகிறார்.
A noise shall come even to the ends of the earth; for the LORD hath a controversy with the nations, he will plead with all flesh; he will give them that are wicked to the sword, saith the LORD.
| בָּ֤א | bāʾ | ba | |
| שָׁאוֹן֙ | šāʾôn | sha-ONE | |
| עַד | ʿad | ad | |
| קְצֵ֣ה | qĕṣē | keh-TSAY | |
| הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| כִּ֣י | kî | kee | |
| רִ֤יב | rîb | reev | |
| לַֽיהוָה֙ | layhwāh | lai-VA | |
| בַּגּוֹיִ֔ם | baggôyim | ba-ɡoh-YEEM | |
| נִשְׁפָּ֥ט | nišpāṭ | neesh-PAHT | |
| ה֖וּא | hûʾ | hoo | |
| לְכָל | lĕkāl | leh-HAHL | |
| בָּשָׂ֑ר | bāśār | ba-SAHR | |
| הָרְשָׁעִ֛ים | horšāʿîm | hore-sha-EEM | |
| נְתָנָ֥ם | nĕtānām | neh-ta-NAHM | |
| לַחֶ֖רֶב | laḥereb | la-HEH-rev | |
| נְאֻם | nĕʾum | neh-OOM | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Cross Reference
ஓசியா 4:1
இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; தேசத்துக்குடிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப்பற்றிய அறிவும் இல்லை.
யோவேல் 3:2
நான் சகல ஜாதியாரையும் கூட்டி யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்தரத்தையும் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்,
ஏசாயா 66:16
கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள்.
மீகா 6:2
பர்வதங்களே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே கர்த்தருடைய வழக்கைக் கேளுங்கள்; கர்த்தருக்கு அவர் ஜனத்தோடே வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலோடே அவர் வழக்காடுவார்.
எசேக்கியேல் 20:35
உங்களை ஜனசதளங்களின் வனாந்தரத்திலே கொண்டுபோய், அங்கே உங்களோடே முகமுகமாய் வழக்காடுவேன்.
ஏசாயா 34:8
அது கர்த்தர் பழிவாங்கும் நாள், சீயோனுடைய வழக்கினிமித்தம் பதிலளிக்கும் வருஷம்.
எரேமியா 45:5
நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே; இதோ, மாம்சமான யாவர்மேலும் தீங்கை வரப்பண்ணுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும், நீ போகும் சகல ஸ்தலங்களிலும் உன் பிராணனை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப்பொருளாகத் தருகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுடனே சொல் என்றார்.
எசேக்கியேல் 38:22
கொள்ளைநோயினாலும் இரத்தம் சிந்துதலினாலும் நான் அவனோடே வழக்காடி, அவன்மேலும் அவன் இராணுவங்களின்மேலும் அவனோடிருக்கும் திரளான ஜனங்களின்மேலும் வெள்ளமாய் அடிக்கும் மழையையும், பெருங்கல்மழையையும், அக்கினியையும், கந்தகத்தையும் வருஷிக்கப்பண்ணுவேன்.
ஓசியா 12:2
யூதாவோடும் கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அவர் யாக்கோபை அவன் வழிகளுக்குத்தக்கதாக விசாரிக்கப்போகிறார்; அவன் கிரியைகளுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார்.
Tags ஆரவாரம் பூமியின் கடையாந்தரமட்டும் போய் எட்டும் ஜாதிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது மாம்சமான யாவரோடும் அவர் நியாயத்துக்குள் பிரவேசிப்பார் துன்மார்க்கரைப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பார் என்று கர்த்தர் செޠβ்லுகிறார்
Jeremiah 25:31 in Tamil Concordance Jeremiah 25:31 in Tamil Interlinear Jeremiah 25:31 in Tamil Image