நீதிமொழிகள் 27:21
வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
Tamil Indian Revised Version
வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனிதனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
Tamil Easy Reading Version
தங்கத்தையும் வெள்ளியையும் சுத்தப்படுத்த ஜனங்கள் நெருப்பைப் பயன்படுத்துகின்றனர். இது போலவே மனிதனும் ஜனங்கள் தனக்கு அளிக்கும் புகழ்ச்சியால் சோதிக்கப்படுகிறான்.
Thiru Viviliam
⁽வெள்ளியை உலைக்களமும் பொன்னைப் புடைக்குகையும் சோதித்துப் பார்க்கும்; ஒருவரை அவர் பெறுகின்ற புகழைக்கொண்டு சோதித்துப் பார்க்கலாம்.⁾
King James Version (KJV)
As the fining pot for silver, and the furnace for gold; so is a man to his praise.
American Standard Version (ASV)
The refining pot is for silver, and the furnace for gold; And a man is `tried’ by his praise.
Bible in Basic English (BBE)
The heating-pot is for silver and the oven-fire for gold, and a man is measured by what he is praised for.
Darby English Bible (DBY)
The fining-pot is for silver, and the furnace for gold; so let a man be to the mouth that praiseth him.
World English Bible (WEB)
The crucible is for silver, And the furnace for gold; But man is refined by his praise.
Young’s Literal Translation (YLT)
A refining pot `is’ for silver, and a furnace for gold, And a man according to his praise.
நீதிமொழிகள் Proverbs 27:21
வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
As the fining pot for silver, and the furnace for gold; so is a man to his praise.
| מַצְרֵ֣ף | maṣrēp | mahts-RAFE | |
| לַ֭כֶּסֶף | lakkesep | LA-keh-sef | |
| וְכ֣וּר | wĕkûr | veh-HOOR | |
| לַזָּהָ֑ב | lazzāhāb | la-za-HAHV | |
| וְ֝אִ֗ישׁ | wĕʾîš | VEH-EESH | |
| לְפִ֣י | lĕpî | leh-FEE | |
| מַהֲלָלֽוֹ׃ | mahălālô | ma-huh-la-LOH |
Cross Reference
நீதிமொழிகள் 17:3
வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.
1 பேதுரு 4:12
பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,
1 பேதுரு 1:7
அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.
மல்கியா 3:3
அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.
சகரியா 13:9
அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என்ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவனென்று அவர்கள் சொல்லுவார்கள்.
சங்கீதம் 66:10
தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.
சங்கீதம் 12:6
கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.
2 சாமுவேல் 15:6
இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்.
2 சாமுவேல் 14:25
இஸ்ரவேலர் அனைவருக்குள்ளும் அப்சலோமைப்போல் சவுந்தரியமுள்ளவனும் மெச்சிக்கொள்ளப்பட்டவனும் இல்லை, உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அவனில் ஒரு பழுதும் இல்லாதிருந்தது.
1 சாமுவேல் 18:30
பெலிஸ்தருடைய பிரபுக்கள் புறப்படுகிறபோதெல்லாம் தாவீது சவுலுடைய ஊழியக்காரர் எல்லாரைப்பார்க்கிலும் புத்திமானாய் நடந்துகொண்டான்; அவன் பேர் மிகவும் கனம்பெற்றது.
1 சாமுவேல் 18:15
அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான்.
1 சாமுவேல் 18:7
அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள்.
Tags வெள்ளிக்குக் குகையும் பொன்னுக்குப் புடமும் சோதனை மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை
Proverbs 27:21 in Tamil Concordance Proverbs 27:21 in Tamil Interlinear Proverbs 27:21 in Tamil Image