1ஆரோனின் இரண்டு குமாரர் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரித்துப்போனபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses after the death of the two sons of Aaron, when they offered before the LORD, and died;
2கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.And the LORD said unto Moses, Speak unto Aaron thy brother, that he come not at all times into the holy place within the vail before the mercy seat, which is upon the ark; that he die not: for I will appear in the cloud upon the mercy seat.
3ஆரோன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்திப் பிரவேசிக்கவேண்டும்.Thus shall Aaron come into the holy place: with a young bullock for a sin offering, and a ram for a burnt offering.
4அவன் பரிசுத்தமான சணல்நூல் சட்டையைத் தரித்து, தன் அரைக்குச் சணல்நூல் ஜல்லடத்தைப்போட்டு, சணல்நூல் பாகையைத் தரித்துக்கொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த வஸ்திரங்கள்; அவன் ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அவைகளைத் தரித்துக்கொண்டு,He shall put on the holy linen coat, and he shall have the linen breeches upon his flesh, and shall be girded with a linen girdle, and with the linen mitre shall he be attired: these are holy garments; therefore shall he wash his flesh in water, and so put them on.
5இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவையும் வாங்கக்கடவன்.And he shall take of the congregation of the children of Israel two kids of the goats for a sin offering, and one ram for a burnt offering.
6பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரப்பண்ணி,And Aaron shall offer his bullock of the sin offering, which is for himself, and make an atonement for himself, and for his house.
7அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,And he shall take the two goats, and present them before the LORD at the door of the tabernacle of the congregation.
8அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,And Aaron shall cast lots upon the two goats; one lot for the LORD, and the other lot for the scapegoat.
9கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி,And Aaron shall bring the goat upon which the LORD's lot fell, and offer him for a sin offering.
10போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்தரத்திலே போகவிடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;But the goat, on which the lot fell to be the scapegoat, shall be presented alive before the LORD, to make an atonement with him, and to let him go for a scapegoat into the wilderness.
11பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்துக்கான காளையைக் கொண்டுவந்து, அதைக் கொன்று,And Aaron shall bring the bullock of the sin offering, which is for himself, and shall make an atonement for himself, and for his house, and shall kill the bullock of the sin offering which is for himself:
12கர்த்தருடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட சுகந்த தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டு வந்து,And he shall take a censer full of burning coals of fire from off the altar before the LORD, and his hands full of sweet incense beaten small, and bring it within the vail:
13தான் சாகாதபடிக்குத் தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்And he shall put the incense upon the fire before the LORD, that the cloud of the incense may cover the mercy seat that is upon the testimony, that he die not:
14பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் தெளிக்கக்கடவன்.And he shall take of the blood of the bullock, and sprinkle it with his finger upon the mercy seat eastward; and before the mercy seat shall he sprinkle of the blood with his finger seven times.
15பின்பு ஜனத்தினுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து,Then shall he kill the goat of the sin offering, that is for the people, and bring his blood within the vail, and do with that blood as he did with the blood of the bullock, and sprinkle it upon the mercy seat, and before the mercy seat:
16இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும் அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.And he shall make an atonement for the holy place, because of the uncleanness of the children of Israel, and because of their transgressions in all their sins: and so shall he do for the tabernacle of the congregation, that remaineth among them in the midst of their uncleanness.
17பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது.And there shall be no man in the tabernacle of the congregation when he goeth in to make an atonement in the holy place, until he come out, and have made an atonement for himself, and for his household, and for all the congregation of Israel.
18பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி,And he shall go out unto the altar that is before the LORD, and make an atonement for it; and shall take of the blood of the bullock, and of the blood of the goat, and put it upon the horns of the altar round about.
19தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுதரம் அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் புத்திரரின் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தக்கடவன்And he shall sprinkle of the blood upon it with his finger seven times, and cleanse it, and hallow it from the uncleanness of the children of Israel.
20அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து தீர்த்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரப்பண்ணி,And when he hath made an end of reconciling the holy place, and the tabernacle of the congregation, and the altar, he shall bring the live goat:
21அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்.And Aaron shall lay both his hands upon the head of the live goat, and confess over him all the iniquities of the children of Israel, and all their transgressions in all their sins, putting them upon the head of the goat, and shall send him away by the hand of a fit man into the wilderness:
22அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போகவிடக்கடவன்.And the goat shall bear upon him all their iniquities unto a land not inhabited: and he shall let go the goat in the wilderness.
23ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போது, உடுத்தியிருந்த சணல்நூல் வஸ்திரங்களைக் களைந்து, அங்கே வைத்துவிட்டு,And Aaron shall come into the tabernacle of the congregation, and shall put off the linen garments, which he put on when he went into the holy place, and shall leave them there:
24பரிசுத்த இடத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, தன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்க தகனபலியையும் ஜனங்களின் சர்வாங்க தகனபலியையும் இட்டு, தனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து,And he shall wash his flesh with water in the holy place, and put on his garments, and come forth, and offer his burnt offering, and the burnt offering of the people, and make an atonement for himself, and for the people.
25பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்.And the fat of the sin offering shall he burn upon the altar.
26போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக.And he that let go the goat for the scapegoat shall wash his clothes, and bathe his flesh in water, and afterward come into the camp.
27பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்தஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் அக்கினியிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.And the bullock for the sin offering, and the goat for the sin offering, whose blood was brought in to make atonement in the holy place, shall one carry forth without the camp; and they shall burn in the fire their skins, and their flesh, and their dung.
28அவைகளைச் சுட்டெரித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக.And he that burneth them shall wash his clothes, and bathe his flesh in water, and afterward he shall come into the camp.
29ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, சுதேசியானாலும் உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது.And this shall be a statute for ever unto you: that in the seventh month, on the tenth day of the month, ye shall afflict your souls, and do no work at all, whether it be one of your own country, or a stranger that sojourneth among you:
30கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.For on that day shall the priest make an atonement for you, to cleanse you, that ye may be clean from all your sins before the LORD.
31உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப் படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை.It shall be a sabbath of rest unto you, and ye shall afflict your souls, by a statute for ever.
32அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பன் பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியஞ்செய்யப் பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த வஸ்திரங்களாகிய சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு,And the priest, whom he shall anoint, and whom he shall consecrate to minister in the priest's office in his father's stead, shall make the atonement, and shall put on the linen clothes, even the holy garments:
33பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து, ஆசாரியருக்காகவும் சபையின் சகல ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.And he shall make an atonement for the holy sanctuary, and he shall make an atonement for the tabernacle of the congregation, and for the altar, and he shall make an atonement for the priests, and for all the people of the congregation.
34இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.And this shall be an everlasting statute unto you, to make an atonement for the children of Israel for all their sins once a year. And he did as the LORD commanded Moses.
1Aaronin iranndu kumaarar karththarutaiya sannithiyilae sernthu mariththupponapinpu, Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses after the death of the two sons of Aaron, when they offered before the LORD, and died;
2Kirupaasanaththinmael oru maekaththil naan kaanappaduvaen; aathalaal un sakotharanaakiya aaron saakaathapati, Parisuththa sthalaththilae thiraikku utpuraththilirukkira pettiyinmaelulla kirupaasana mootikku munpaakach sakala vaelaiyilum varavaenndaam entu avanukkuch sol.And the LORD said unto Moses, Speak unto Aaron thy brother, that he come not at all times into the holy place within the vail before the mercy seat, which is upon the ark; that he die not: for I will appear in the cloud upon the mercy seat.
3Aaron Parisuththa sthalaththukkul piravaesikkavaenntiya vithamaavathu: avan oru kaalaiyaip paavanivaaranapaliyaakavum, oru aattukkadaavaich sarvaanga thakanapaliyaakavum seluththip piravaesikkavaenndum.Thus shall Aaron come into the holy place: with a young bullock for a sin offering, and a ram for a burnt offering.
4Avan Parisuththamaana sanalnool sattaைyaith thariththu, than araikkuch sanalnool jalladaththaippottu, sanalnool paakaiyaith thariththukkonntirukkavaenndum; avaikal Parisuththa vasthirangal; avan jalaththilae snaanampannnni, avaikalaith thariththukkonndu,He shall put on the holy linen coat, and he shall have the linen breeches upon his flesh, and shall be girded with a linen girdle, and with the linen mitre shall he be attired: these are holy garments; therefore shall he wash his flesh in water, and so put them on.
5Israel puththiraraakiya Sabaiyaaridaththilae, paavanivaaranapaliyaaka oru aattukkadaavaiyum vaangakkadavan.And he shall take of the congregation of the children of Israel two kids of the goats for a sin offering, and one ram for a burnt offering.
6Pinpu aaron thanakkaakavum than veettarukkaakavum paavanivirththi seyyumpatikku, thannutaiya paavanivaaranapaliyin kaalaiyaich serappannnni,And Aaron shall offer his bullock of the sin offering, which is for himself, and make an atonement for himself, and for his house.
7Antha iranndu vellaattukkadaakkalaiyum konnduvanthu, aasarippuk koodaaravaasalilae karththarutaiya sannithiyil niraுththi,And he shall take the two goats, and present them before the LORD at the door of the tabernacle of the congregation.
8Antha iranndu vellaattukkadaakkalaiyunguriththuk karththarukkentu oru seettum, pokkaadaaka vidappadum vellaattukkadaavukkentu oru seettum pottu,And Aaron shall cast lots upon the two goats; one lot for the LORD, and the other lot for the scapegoat.
9Karththarukkentu seettu viluntha vellaattukkadaavaip paavanivaaranapaliyaakach serappannnni,And Aaron shall bring the goat upon which the LORD's lot fell, and offer him for a sin offering.
10Pokkaadaaka vidappadach seettu viluntha vellaattukkadaavai, athaikkonndu paavanivirththi unndaakkavum athaip pokkaadaaka vanaantharaththilae pokavidavum, karththarutaiya sannithiyil uyirotae niraுththi;But the goat, on which the lot fell to be the scapegoat, shall be presented alive before the LORD, to make an atonement with him, and to let him go for a scapegoat into the wilderness.
11Pinpu aaron thanakkaakavum than veettarukkaakavum paavanivirththi seyyumpati, thannutaiya paavanivaaranaththukkaana kaalaiyaik konnduvanthu, athaik kontu,And Aaron shall bring the bullock of the sin offering, which is for himself, and shall make an atonement for himself, and for his house, and shall kill the bullock of the sin offering which is for himself:
12Karththarutaiya sannithiyilirukkum palipeedaththinmaelulla neruppuththanalinaal thoopakalasaththai nirappi, potiyaakkappatta sukantha thoopavarkkaththilae than kaippitikal niraiya eduththu, thiraikku utpuramaakak konndu vanthu,And he shall take a censer full of burning coals of fire from off the altar before the LORD, and his hands full of sweet incense beaten small, and bring it within the vail:
13Thaan saakaathapatikkuth thoopamaekamaanathu saatchippettiyinmael irukkum kirupaasanaththai moodaththakkathaaka, karththarutaiya sannithiyil akkiniyinmael thoopavarkkaththaip podakkadavanAnd he shall put the incense upon the fire before the LORD, that the cloud of the incense may cover the mercy seat that is upon the testimony, that he die not:
14Pinpu kaalaiyin iraththaththilae konjam eduththu, geelppuramaaka nintu, than viralinaal thelikkakkadavan.And he shall take of the blood of the bullock, and sprinkle it with his finger upon the mercy seat eastward; and before the mercy seat shall he sprinkle of the blood with his finger seven times.
15Pinpu janaththinutaiya paavanivaaranapaliyaana vellaattukkadaavai avan kontu, athin iraththaththaith thiraikku utpuramaakak konnduvanthu, kaalaiyin iraththaththaith theliththathupola, athin iraththaththaiyum kirupaasanaththinmaelum atharku munpaakavum theliththu,Then shall he kill the goat of the sin offering, that is for the people, and bring his blood within the vail, and do with that blood as he did with the blood of the bullock, and sprinkle it upon the mercy seat, and before the mercy seat:
16Israel puththirarutaiya theettukalinimiththamum avarkalutaiya sakala paavangalinaalum unndaana avarkalutaiya meeraுthalkalinimiththamum, Parisuththa sthalaththirkaakap piraayachchiththanjaெythu, avarkalidaththil avarkalutaiya theettukalukkullae nirkira aasarippuk koodaaraththirkaakavum appatiyae seyyakkadavan.And he shall make an atonement for the holy place, because of the uncleanness of the children of Israel, and because of their transgressions in all their sins: and so shall he do for the tabernacle of the congregation, that remaineth among them in the midst of their uncleanness.
17Paavanivirththi seyyumpati avan Parisuththa sthalaththukkul piravaesiththu, thanakkaakavum than veettarukkaakavum Israel Sabaiyaar anaivarukkaakavum paavanivirththi seythu, veliyae varumalavum aasarippuk koodaaraththil oruvarum irukkalaakaathu.And there shall be no man in the tabernacle of the congregation when he goeth in to make an atonement in the holy place, until he come out, and have made an atonement for himself, and for his household, and for all the congregation of Israel.
18Pinpu avan karththarutaiya sannithiyil irukkira palipeedaththanntai vanthu, atharkaakap piraayachchiththanjaெythu, kaalaiyin iraththaththilum vellaattukkadaavin iraththaththilum konjam eduththu, palipeedaththuk kompukalinmael suttilum poosi,And he shall go out unto the altar that is before the LORD, and make an atonement for it; and shall take of the blood of the bullock, and of the blood of the goat, and put it upon the horns of the altar round about.
19Than viralinaal antha iraththaththil eduththu, aelutharam athinmael theliththu, athai Israel puththirarin neengach suththikariththu, ParisuththappaduththakkadavanAnd he shall sprinkle of the blood upon it with his finger seven times, and cleanse it, and hallow it from the uncleanness of the children of Israel.
20Avan ippatip Parisuththa sthalaththukkum aasarippuk koodaaraththukkum palipeedaththukkum piraayachchiththanjaெythu theerththapinpu, uyirotirukkira vellaattukkadaavaich serappannnni,And when he hath made an end of reconciling the holy place, and the tabernacle of the congregation, and the altar, he shall bring the live goat:
21Athin thalaiyinmael aaron than iranndu kaikalaiyum vaiththu, athinmael Israel puththirarutaiya sakala akkiramangalaiyum avarkalutaiya ellaap paavangalinaalum unndaana avarkalutaiya sakala meeraுthalkalaiyum arikkaiyittu, avaikalai vellaattukkadaavinutaiya thalaiyinmael sumaththi, athai atharkaana aalvasamaay vanaantharaththukku anuppividakkadavan.And Aaron shall lay both his hands upon the head of the live goat, and confess over him all the iniquities of the children of Israel, and all their transgressions in all their sins, putting them upon the head of the goat, and shall send him away by the hand of a fit man into the wilderness:
22Antha vellaattukkadaa avarkalutaiya akkiramangalaiyellaam thanmael sumanthukonndu, kutiyillaatha thaesaththukkup povathaaka; avan antha vellaattukkadaavai vanaantharaththilae pokavidakkadavan.And the goat shall bear upon him all their iniquities unto a land not inhabited: and he shall let go the goat in the wilderness.
23Aaron aasarippuk koodaaraththukkul vanthu, thaan Parisuththa sthalaththukkul piravaesikkumpothu, uduththiyiruntha sanalnool vasthirangalaik kalainthu, angae vaiththuvittu,And Aaron shall come into the tabernacle of the congregation, and shall put off the linen garments, which he put on when he went into the holy place, and shall leave them there:
24Parisuththa idaththilae jalaththil snaanampannnni, than vasthirangalai uduththikkonndu, veliyae vanthu, than sarvaanga thakanapaliyaiyum janangalin sarvaanga thakanapaliyaiyum ittu, thanakkaakavum janangalukkaakavum paavanivirththi seythu,And he shall wash his flesh with water in the holy place, and put on his garments, and come forth, and offer his burnt offering, and the burnt offering of the people, and make an atonement for himself, and for the people.
25Paavanivaaranapaliyin koluppaip palipeedaththinmael thakanikkakkadavan.And the fat of the sin offering shall he burn upon the altar.
26Pokavidappadum pokkaadaakiya vellaattukkadaavaik konndupoy vittavan, than vasthirangalaith thoyththu, jalaththil snaanampannnni, pinpu paalayaththukkul varuvaanaaka.And he that let go the goat for the scapegoat shall wash his clothes, and bathe his flesh in water, and afterward come into the camp.
27Paavanivirththikkentu Parisuththasthalaththukkul iraththam konnduvarappatta paavanivaaranapaliyaakiya kaalaiyaiyum, paavanivaaranapaliyaakiya vellaattukkadaavaiyum, paalayaththukkup purampae konndupoy, avaikalin tholaiyum maamsaththaiyum saanniyaiyum akkiniyilae sutterikkakkadavarkal.And the bullock for the sin offering, and the goat for the sin offering, whose blood was brought in to make atonement in the holy place, shall one carry forth without the camp; and they shall burn in the fire their skins, and their flesh, and their dung.
28Avaikalaich sutteriththavan than vasthirangalaith thoyththu, jalaththilae snaanampannnni, pinpu paalayaththukkul varuvaanaaka.And he that burneth them shall wash his clothes, and bathe his flesh in water, and afterward he shall come into the camp.
29Aelaam maatham paththaam thaethiyilae, suthaesiyaanaalum ungalukkul thangum parathaesiyaanaalum, thangal aaththumaakkalaith thaalmaippaduththuvathumanti, oru vaelaiyum seyyaamal irukkavaenndum; ithu ungalukku niththiya kattalaiyaay irukkakkadavathu.And this shall be a statute for ever unto you: that in the seventh month, on the tenth day of the month, ye shall afflict your souls, and do no work at all, whether it be one of your own country, or a stranger that sojourneth among you:
30Karththarutaiya sannithiyil ungal paavamellaam neengich suththikarikkumpati, annaalil ungalaich suththikarikkum poruttu, ungalukkaakap paavanivirththi seyyappadum.For on that day shall the priest make an atonement for you, to cleanse you, that ye may be clean from all your sins before the LORD.
31Ungalukku athu viseshiththa oyvunaal; athilae ungal aaththumaakkalaith thaalmaip paduththakkadaveerkal; ithu niththiya kattalai.It shall be a sabbath of rest unto you, and ye shall afflict your souls, by a statute for ever.
32Apishaekam pettavanum, than thakappan pattaththirku vanthu aasaariya ooliyanjaெyyap pirathishtaipannnappattavanumaakiya aasaariyanae paavanivirththi seyyakkadavan. Avan Parisuththa vasthirangalaakiya sanalnool vasthirangalai uduththikkonndu,And the priest, whom he shall anoint, and whom he shall consecrate to minister in the priest's office in his father's stead, shall make the atonement, and shall put on the linen clothes, even the holy garments:
33Parisuththa sthalaththukkum aasarippuk koodaaraththukkum palipeedaththukkum piraayachchiththanjaெythu, aasaariyarukkaakavum Sabaiyin sakala janangalukkaakavum paavanivirththi seyyakkadavan.And he shall make an atonement for the holy sanctuary, and he shall make an atonement for the tabernacle of the congregation, and for the altar, and he shall make an atonement for the priests, and for all the people of the congregation.
34Ippati varushaththil orumurai Israel puththirarukkaaka, avarkalutaiya sakala paavangalukkum paavanivirththi seyvathu, ungalukku niththiya kattalaiyaayirukkakkadavathu entu sol entar. Karththar Moseskkuk kattalaiyittapatiyae aaron seythaan.And this shall be an everlasting statute unto you, to make an atonement for the children of Israel for all their sins once a year. And he did as the LORD commanded Moses.