Elunthar Iraivan
எழுந்தார் இறைவன் – ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்
1. விழுந்தவரைக் கரையேற்றப் – பாவத்
தழுந்து மனுக்குலத்தை மாற்ற – விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற – எழுந்தார்
2. செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
பக்தர் யாவரும் களிக்க – எழுந்தார்
3. கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
இரு திறத்தாரையும் சேர்க்க – எழுந்தார்
4. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
பூவின் மீதுசபை செழிக்க – எழுந்தார்
5. ஏதுந் தீவினை செய்யாத் தூயன் – எப்
போதுமே நன்மைபுரி நேயன் – தப்
பாது காத்திடும் நல்லாயன் – எழுந்தார்
Elunthar Iraivan – எழுந்தார் இறைவன் Lyrics in English
Elunthar Iraivan elunthaar iraivan – jeyamae jeyamenavae elunthaar iraivan1. Vilunthavaraik karaiyaettap – paavath thalunthu manukkulaththai maatta – vinnnuk kelunthu naam avaraiyae potta – elunthaar2. Seththavar meenndumae pilaikka – uyar niththiya jeevanai alikkath – thaeva pakthar yaavarum kalikka – elunthaar3. Karuthiya kaariyam vaaykkath – thaeva suruthi molikalellaam kaakka – nam iru thiraththaaraiyum serkka – elunthaar4. Saavin payangaraththai olikkak – ketta aaviyin vallamaiyai alikka – ip poovin meethuSabai selikka – elunthaar5. Aethun theevinai seyyaath thooyan – ep pothumae nanmaipuri naeyan – thap paathu kaaththidum nallaayan – elunthaar
PowerPoint Presentation Slides for the song Elunthar Iraivan – எழுந்தார் இறைவன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Elunthar Iraivan – எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே PPT
Elunthar Iraivan PPT

