Parama Yerusalame Paralogam
பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே
ஆமென் அல்லேலூயா – (4)
1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே
2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே
3. சர்வ சங்க சபையின் அங்கமானேன்
சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் – ஆஹா என் எருசலேமே
4. விடுதலையே விடுதலை விடுதலையே
லோகமதின் மோகத்தில் விடுதலையே
நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே
நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே – சுயாதீன எருசலேமே
5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
மரணமில்லை மனநோயின் துயரமில்லை
அலறலில்லை அழுகையின் சோகமில்லை – தலைநகராம் எருசலேமே
Parama Yerusalame Paralogam – பரம எருசலேமே பரலோகம் Lyrics in English
Parama Yerusalame Paralogam parama erusalaemae Paralokam vittiranguthae alangaara manavaattiyaay alakaaka joliththiduthae Amen Alleluya – (4)1. Erusalaemae koli than kunjukalai aettannaikkum aekkaththin kural kaettaேn thaaypparavai thutiththidum paasam kanntaen thaaparamaay sirakinil thanjamaanaen – kanivaana erusalaemae2. Jeeva Dhevan nakarinil kutipukunthaen seeyon malaich seerukkuch sonthamaanaen neethi Dhevan neelati siram puthaiththaen neethimaankal aaviyil maruvi ninten – maelaana erusalaemae3. Sarva sanga Sabaiyin angamaanaen sarvaloka naduvarin arukil vanthaen parinthuraikkum iraththaththil moolki ninten parivaaramaay thootharkal aati nintar – aahaa en erusalaemae4. Viduthalaiyae viduthalai viduthalaiyae lokamathin mokaththil viduthalaiyae naanaeyenum suya vaalvil viduthalaiyae naathar thanil vaalvathaal viduthalaiyae – suyaatheena erusalaemae5. Kannnneer yaavum kanivodu thutaiththiduvaar ennnamathin aekkangal theerththiduvaar maranamillai manaNnoyin thuyaramillai alaralillai alukaiyin sokamillai – thalainakaraam erusalaemae
PowerPoint Presentation Slides for the song Parama Yerusalame Paralogam – பரம எருசலேமே பரலோகம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parama Yerusalame Paralogam – பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே PPT
Parama Yerusalame Paralogam PPT
Parama Yerusalame Paralogam – பரம எருசலேமே பரலோகம் Song Meaning
Parama Jerusalem Paralogam
Heaven is opened to Jerusalem
Shine beautifully as a beautiful bride
Amen Hallelujah – (4)
1. Jerusalem is the hen with her chicks
I heard the voice of longing
I saw the throbbing affection of a mother bird
I take refuge in the wings of hope – Merciful Jerusalem
2. Dwelt in the city of the living God
I belong to Mount Zion
I buried Neeti Devan
I stand in the spirit of the righteous - Jerusalem above
3. I became a member of Sarva Sangha Sabha
I came near the universal arbiter
I stood immersed in suggestive blood
The angels in retinue stood swaying – Ah my Jerusalem
4. Freedom is freedom is freedom
Lokamad's passion is liberation
I am freedom in self-life
Living alone is liberation – independent Jerusalem
5. He wipes away all tears with mercy
Ennamatin will solve longings
No death, no misery of mental illness
There is no crying, no mourning – Jerusalem is the capital
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எருசலேமே – விடுதலையே தேவன் நின்றேன் Parama Yerusalame Paralogam பரம பரலோகம் விட்டிறங்குதே அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே ஆமென் அல்லேலூயா கோழி குஞ்சுகளை தமிழ்
