அந்நேரத்திலே மனுஷர் கைவிரல்கள் தோன்றி விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்.
அப்பொழுது தானியேல் ராஜாவின்முன் உள்ளே அழைத்துவந்துவிடப்பட்டான்; ராஜா தானியேலைப் பார்த்து: நீ என் பிதாவாகிய ராஜா யூதாவிலிருந்து சிறைபிடித்துவந்த யூதரில் ஒருவனாகிய தானியேல் அல்லவா?
இப்போதும் இந்த எழுத்தை வாசிக்கிறதற்கும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்கும் சாஸ்திரிகளும் ஜோசியரும் எனக்கு முன்பாக அழைத்துக்கொண்டுவரப்பட்டார்கள்; ஆனாலும் இந்த வசனத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்த அவர்களால் கூடாமற்போயிற்று.
அப்பொழுது தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: உம்முடைய வெகுமானங்கள் உம்மிடத்திலேயே இருக்கட்டும்; உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும். இந்த எழுத்தை நான் ராஜாவுக்கு வாசித்து, இதின் அர்த்தத்தைத் தெரிவிப்பேன்.
ராஜாவே உன்னதமான தேவன் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு ராஜ்யத்தையும் மகத்துவத்தையும் கனத்தையும் மகிமையையும் கொடுத்தார்.
| Then | אֱדַ֙יִן֙ | ʾĕdayin | ay-DA-YEEN |
| came in | עָֽלִּ֔לין | ʿāllilyn | ah-LEEL-y-n |
| all | כֹּ֖ל | kōl | kole |
| the king's | חַכִּימֵ֣י | ḥakkîmê | ha-kee-MAY |
| wise | מַלְכָּ֑א | malkāʾ | mahl-KA |
| men: but they could | וְלָֽא | wĕlāʾ | veh-LA |
| not | כָהֲלִ֤ין | kāhălîn | ha-huh-LEEN |
| read | כְּתָבָא֙ | kĕtābāʾ | keh-ta-VA |
| the writing, | לְמִקְרֵ֔א | lĕmiqrēʾ | leh-meek-RAY |
| nor make known | וּפִשְׁרֵ֖אּ | ûpišrēʾ | oo-feesh-RAY |
| to the king | לְהוֹדָעָ֥ה | lĕhôdāʿâ | leh-hoh-da-AH |
| the interpretation | לְמַלְכָּֽא׃ | lĕmalkāʾ | leh-mahl-KA |