அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப் பண்ணும் என்றார்.
அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்துக்கு நேராக இறைத்தான்; அப்பொழுது மனிதர் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று.
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசம் எங்கும் மனிதர் மேலும் மிருகஜீவன்கள் மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற சகலவிதமான பயிர்வகைகள் மேலும் கல் மழை பெய்ய, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.
அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று, எகிப்து தேசத்தின்மேல் கர்த்தர் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்.
மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதைப் பார்வோன் கண்டபோது, அவனும் அவன் ஊழியக்காரரும் பின்னும் பாவம் செய்து, தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.
| And the magicians | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| could | יָכְל֣וּ | yoklû | yoke-LOO |
| not | הַֽחַרְטֻמִּ֗ים | haḥarṭummîm | ha-hahr-too-MEEM |
| stand | לַֽעֲמֹ֛ד | laʿămōd | la-uh-MODE |
| before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| Moses | מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH |
| because of | מִפְּנֵ֣י | mippĕnê | mee-peh-NAY |
| the boils; | הַשְּׁחִ֑ין | haššĕḥîn | ha-sheh-HEEN |
| for | כִּֽי | kî | kee |
| the boil | הָיָ֣ה | hāyâ | ha-YA |
| was | הַשְּׁחִ֔ין | haššĕḥîn | ha-sheh-HEEN |
| upon the magicians, | בַּֽחֲרְטֻמִּ֖ם | baḥărṭummim | ba-hur-too-MEEM |
| and upon all | וּבְכָל | ûbĕkāl | oo-veh-HAHL |
| the Egyptians. | מִצְרָֽיִם׃ | miṣrāyim | meets-RA-yeem |