எஸ்றா 2

fullscreen1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,

fullscreen2 செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களோடேகூட திரும்பிவந்த தேசத்துப் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனமான மனிதரின் தொகையாவது:

fullscreen3 பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.

fullscreen4 செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.

fullscreen5 ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.

fullscreen6 யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.

fullscreen7 ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.

fullscreen8 சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்.

fullscreen9 சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.

fullscreen10 பானியின் புத்திரர் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.

fullscreen11 பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.

fullscreen12 அஸ்காதின் புத்திரர் ஆயிரத்துஇருநூற்று இருபத்திரண்டுபேர்.

fullscreen13 அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர்.

fullscreen14 பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்.

fullscreen15 ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்து நான்குபேர்.

fullscreen16 எசேக்கியாவின் சந்ததியான அதேரின் புத்திரர் தொண்ணூற்றெட்டுப்பேர்.

fullscreen17 பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர்.

fullscreen18 யோரோகின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர்.

fullscreen19 ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.

fullscreen20 கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர்.

fullscreen21 பெத்லகேமின் புத்திரர் நூற்றிருபத்துமுன்றுபேர்.

fullscreen22 நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.

fullscreen23 ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.

fullscreen24 அஸ்மாவேத்தின் புத்திரர் நாற்பத்திரண்டுபேர்.

fullscreen25 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் புத்திரர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.

fullscreen26 ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொருபேர்.

fullscreen27 மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர்.

fullscreen28 பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.

fullscreen29 நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர்.

fullscreen30 மக்பீஷின் புத்திரர் நூற்றைம்பத்தாறுபேர்.

fullscreen31 மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.

fullscreen32 ஆரீமின் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.

fullscreen33 லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர்.

fullscreen34 எரிகோவின் புத்திரர் முந்நூற்றுநாற்பத்தைந்துபேர்.

fullscreen35 சேனாகின் புத்திரர் மூவாயிரத்துஅறுநூற்று முப்பதுபேர்.

fullscreen36 ஆசாரியரானவர்கள் யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.

fullscreen37 இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.

fullscreen38 பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்துஇருநூற்று நாற்பத்தேழுபேர்.

fullscreen39 ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப்பதினேழுபேர்.

fullscreen40 லேவியரானவர்கள்: ஒதாயாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் புத்திரர் எழுபத்து நான்குபேர்.

fullscreen41 பாடகர்களானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.

fullscreen42 வாசல் காவலாளரின் புத்திரரானவர்கள்: சல்லுூமின் புத்திரரும், அதேரின் புத்திரரும், தல்மோனின் புத்திரரும், அக்கூபின் புத்திரரும், அதிதாவின் புத்திரரும், சோபாயின் புத்திரருமானவர்களெல்லாரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.

fullscreen43 நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபா கோத்தின் புத்திரர்,

fullscreen44 கேரோசின் புத்திரர், சீயாகாவின் புத்திரர், பாதோனின் புத்திரர்,

fullscreen45 லெபானாகின் புத்திரர், அகாபாவின் புத்திரர், அக்கூபின் புத்திரர்,

fullscreen46 ஆகாபின் புத்திரர், சல்மாயின் புத்திரர், ஆனானின் புத்திரர்,

fullscreen47 கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர், ராயாகின் புத்திரர்,

fullscreen48 ரேத்சினின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், காசாமின் புத்திரர்,

fullscreen49 ஊசாவின் புத்திரர், பாயோகின் புத்திரர், பேசாயின் புத்திரர்,

fullscreen50 அஸ்னாவின் புத்திரர், மெயூனீமின் புத்திரர், நெபுசீமின் புத்திரர்,

fullscreen51 பக்பூக்கின் புத்திரர், அகுபாவின்புத்திரர், அர்கூரின் புத்திரர்,

fullscreen52 பஸ்லுூதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,

fullscreen53 பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர்,

fullscreen54 நெத்சியாவின் புத்திரர், அதிபாவின் புத்திரருமே.

fullscreen55 சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,

fullscreen56 யாலாகின் புத்திரர், தர்கோனின்புத்திரர், கித்தேலின் புத்திரர்,

fullscreen57 செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், செபாயிமிலுள்ள பொகெரேத்தின் புத்திரர், ஆமியின்புத்திரருமே.

fullscreen58 நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.

fullscreen59 தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:

fullscreen60 தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர் ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.

fullscreen61 ஆசாரியரின் புத்திரரில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரரே.

fullscreen62 இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரியஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.

fullscreen63 ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.

fullscreen64 சபையார் எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.

fullscreen65 அவர்களைத்தவிர ஏழாயிரத்துமுந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூறு பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.

fullscreen66 அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்றுநாற்பத்தைந்து,

fullscreen67 அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.

fullscreen68 வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்காக மன உறசாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.

fullscreen69 அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசையம், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும் நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.

fullscreen70 ஆசாரியரும், லேவியரும், ஜனங்களில் சிலரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.