Full Screen ?
 

Umakaga Thanae Iyya - உமக்காகத் தானே ஐயா நான்

உமக்காகத் தானே -ஐயா நான்
உயிர் வாழ்கிறேன் – ஐயா
இந்த உடலும் உள்ளமெல்லாம் அன்பர்
உமக்காகத்தானே ஐயா

1. கோதுமை மணிபோல் மடிந்திடுவேன்
உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன்
அவமானம் நிந்தை சிலுவைதனை
அனுதினம் உமக்காய் சுமக்கின்றேன்

2. எனது ஜீவனை மதிக்கவில்லை
ஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லை
எல்லாருக்கும் நான் எல்லாமானேன்
அனைவருக்கும் நான் அடிமையானேன்

3. எத்தனை இடர்கள் வந்தாலும்
எதுவும் என்னை அசைப்பதில்லை
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன்
மனநிறைவோடு பணி செய்வேன்

4. எனது பேச்செல்லாம் உமக்காக
எனது செயலெல்லாம் உமக்காக
எழுந்தாலும் நடந்தாலும் உமக்காக
அமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக

5. பண்படுத்தும் உம் சித்தம்போல
பயன்படுத்தும்உம் விருப்பம்போல
உம்கரத்தில் நான் புல்லாங்குழல்
ஒவ்வொரு நாளும் இசைத்திடுமே

உமக்காகத் தானே ஐயா நான் – Umakaga Thanae Iyya Lyrics in English

Umakkaakath thaanae -aiyaa naan uyir vaalkiraேn – aiyaa intha udalum ullamellaam anpar umakkaakaththaanae aiyaa 1. Kothumai mannipol matinthiduvaen umakkaay thinamum palan koduppaen avamaanam ninthai siluvaithanai anuthinam umakkaay sumakkinten 2. Enathu jeevanai mathikkavillai oru poruttay naan kannikkavillai ellaarukkum naan ellaamaanaen anaivarukkum naan atimaiyaanaen 3. Eththanai idarkal vanthaalum ethuvum ennai asaippathillai makilvudan thodarnthu odukiraேn mananiraivodu panni seyvaen 4. Enathu paechchellaam umakkaaka enathu seyalellaam umakkaaka elunthaalum nadanthaalum umakkaaka amarnthaalum paduththaalum umakkaaka 5. Pannpaduththum um siththampola payanpaduththumum viruppampola umkaraththil naan pullaangulal ovvoru naalum isaiththidumae

PowerPoint Presentation Slides for the song உமக்காகத் தானே ஐயா நான் – Umakaga Thanae Iyya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umakaga Thanae Iyya – உமக்காகத் தானே ஐயா நான் PPT
Umakaga Thanae Iyya PPT

உமக்காக ஐயா எனது உமக்காய் உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன் உடலும் உள்ளமெல்லாம் அன்பர் உமக்காகத்தானே கோதுமை மணிபோல் மடிந்திடுவேன் தினமும் பலன் கொடுப்பேன் அவமானம் தமிழ்