எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே , நீ
எந்நாளுமே துதிப்பாய் !
அனுபல்லவி
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது – எந்நாளுமே
சரணங்கள்
1.பாவங்கள் எத்தனையோ – நினையா திருத்தாருன்
பாவங்கள் எத்தனையோ ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி – எந்நாளுமே
2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை ?
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,
நேயமதாக ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே
3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே , பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு ,
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால் – எந்நாளுமே
4. பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே ,
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே , சத்திய மேயிது – எந்நாளுமே
5. மன்னிப்பு மாட்சிமையாம் – மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ?
எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே – எந்நாளுமே
6. தந்தைதன் பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு ?
எந்த வேளையும் அவரோடு தங்கினால் ,
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே – எந்நாளுமே
Ennalumae Thuthippai – எந்நாளுமே துதிப்பாய் Lyrics in English
Ennaalumae thuthippaay – ennaaththumaavae , nee ennaalumae thuthippaay ! Anupallavi innaal varaiyilae unnathanaar seytha ennnnillaa nanmaikal yaavu maravaathu – ennaalumae saranangal 1.paavangal eththanaiyo – ninaiyaa thiruththaarun paavangal eththanaiyo ? Paalaana Nnoyai akattik kunamaakkip paarinil vaiththa makaa thaya vaiennnni – ennaalumae 2. Eththanaiyo kirupai – unnuyirkkuch seythaarae eththanaiyo kirupai ? Niththamunaimuti soottinathumanti , naeyamathaaka jeevanai meettathaal – ennaalumae 3. Nanmaiyaalun vaayai – niraiththaarae , poorththiyaay nanmaiyaalun vaayai unvayathu kalukaippol palangaொnndu , ongu ilamaipo laakavae seythathaal – ennaalumae 4. Poomikkum vaanaththukkum – ulla thooram polavae , poomikkum vaanaththukkum saami payamullavar mael avar arul saalavum thangumae , saththiya maeyithu – ennaalumae 5. Mannippu maatchimaiyaam – maathaevanarulum mannippu maatchimaiyaam ennnuvaayo kilakku maerkin thooramae ? Ennnnil unpaavam akantathaththooramae – ennaalumae 6. Thanthaithan pillaikatku – thayavo tirangaano thanthaithan pillaikatku ? Entha vaelaiyum avarodu thanginaal , sontham paaraattiyae thookkich sumappaarae – ennaalumae
PowerPoint Presentation Slides for the song Ennalumae Thuthippai – எந்நாளுமே துதிப்பாய்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennalumae Thuthippai – எந்நாளுமே துதிப்பாய் PPT
Ennalumae Thuthippai PPT

