Full Screen ?
 

Yesuvin Karangalai - இயேசுவின் கரங்களை

இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான்
இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன்
எதற்கும் பயமில்லையே
இனியும் கவலை எனக்கில்லையே
அல்லேலூயா (4)

1. இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்
இனிவரும் பலன்மேல் நோக்கமானேன்
அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே
அரவணைக்கும் இயேசு போதும்போதுமே

2. அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்
அதிகமான கனமகிமை உண்டாக்கும்
காண்கின்ற எல்லாமே அநித்தியம்
காணாதவைகளோ நித்தியம்

3. பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்
வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்
சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்
தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன்

4. கர்த்தரையே முன் வைத்து ஓடுகிறேன்
கடும் புயல் வந்தாலும் அசைவதில்லை
எதையும் தாங்குவேன் இயேசுவுக்காய்
இனியும் சோர்ந்து போவதே இல்லை

5. ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன்
அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன்
கோடைக்காலம் வந்தாலும் அச்சமில்லையே
வறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே

6. வேதத்தில் இன்பம் காண்கின்றேன்
விரும்பி தியானம் செய்கின்றேன்
வாய்க்காலில் நடப்பட்ட மரம் நான்
வாழ்க்கையெல்லாம் தவறாமல் கனி கொடுப்பேன்

இயேசுவின் கரங்களை – Yesuvin Karangalai Lyrics in English

Yesuvin karangalaip pattikkonntaen naan Yesuvin karangalaip pattikkonntaen etharkum payamillaiyae iniyum kavalai enakkillaiyae Alleluya (4) 1. Yesuvukkaay avamaanam aettaுk konntaen inivarum palanmael Nnokkamaanaen alinthu pokum paaraattu vaenndaamae aravannaikkum Yesu pothumpothumae 2. Athiviraivil neengum intha upaththiravam athikamaana kanamakimai unndaakkum kaannkinta ellaamae aniththiyam kaannaathavaikalo niththiyam 3. Pakaivarkku anpu kaatdiduvaen veraுppavarkku nanmai seythiduvaen sapippavarkku aasi kooriduvaen thoottaுvorukkaaka jepiththiduvaen 4. Karththaraiyae mun vaiththu odukiraேn kadum puyal vanthaalum asaivathillai ethaiyum thaanguvaen Yesuvukkaay iniyum sornthu povathae illai 5. Aatkonnda thaevanai nampukiraேn avarukkul vaer konndu valarukiraேn kotaikkaalam vanthaalum achchamillaiyae varatchik kaalam vanthaalum kavalaiyillaiyae 6. Vaethaththil inpam kaannkinten virumpi thiyaanam seykinten vaaykkaalil nadappatta maram naan vaalkkaiyellaam thavaraamal kani koduppaen

PowerPoint Presentation Slides for the song இயேசுவின் கரங்களை – Yesuvin Karangalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Karangalai – இயேசுவின் கரங்களை PPT
Yesuvin Karangalai PPT

வந்தாலும் இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் இனியும் இயேசுவுக்காய் எதற்கும் பயமில்லையே கவலை எனக்கில்லையே அல்லேலூயா அவமானம் ஏற்றுக் கொண்டேன் இனிவரும் பலன்மேல் நோக்கமானேன் அழிந்து போகும் தமிழ்