கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
ஆனாலும் கர்த்தர் நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.
இதோ, நான் வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வந்து அவனவன் தன் தன் சிங்காசனத்தை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கும், அதின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும், யூதா தேசத்து எல்லா பட்டணங்களுக்கும் விரோதமாகவும் வைப்பார்கள்.
அவர்கள் என்னைவிட்டு அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி, தங்கள் கைகளின் கிரியையைப் பணிந்துகொண்ட அவர்களுடைய சகல தீமைகளினிமித்தமும் நான் என் நியாயத்தீர்ப்புகளை அவர்களுக்கு விரோதமாகக் கூறுவேன்.
ஆகையால் நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணாதபடிக்கு, நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு.
இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றைய தினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.
அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
| Then the Lord | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֵלָ֑י | ʾēlāy | ay-LAI |
| me, Out of the north | מִצָּפוֹן֙ | miṣṣāpôn | mee-tsa-FONE |
| an evil | תִּפָּתַ֣ח | tippātaḥ | tee-pa-TAHK |
| shall break forth | הָרָעָ֔ה | hārāʿâ | ha-ra-AH |
| upon | עַ֥ל | ʿal | al |
| all | כָּל | kāl | kahl |
| the inhabitants | יֹשְׁבֵ֖י | yōšĕbê | yoh-sheh-VAY |
| of the land. | הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |